பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

98

தண்டபாணிபிள்ளையின் முயற்சி சிதறியது. திரு. வி. க. வின் எண்ணமும் குலைந்தது.

கலியாண சுந்தர முதலியார் முட்டை முடிச்சு களைக் கட்டிக் கொண்டு சித்தமாயிருந்தார்; ஏமாற்றப் பட்டார். ஒரு பிராமணரல்லாதார் தலைமை பூண்டு படையைத் திரட்டிச் செல்லப் பிராமணர் கண் பார்க்குமோ?’ என்று வகுப்பு வாதப் பத்திரிகைகள் எழுதின.

‘திரு. வி. க ஏமாற்றப் பட்டார் என்று சொல் வதைவிட திரு. வி. க வஞ்சிக்கப் பட்டார் என்று சொல்வதே பொருந்தும்.

இதனைப் பிராமணர் பிராமணரல்லாதார் பிரச்சினை யாகக் காண்பது சரியன்று. தமிழ் காட்டு அரசியலில் தலைமை குறித்த சூழ்ச்சி என்று காண்பதே பொருந்தும்.

ஆச்சாரியார் சூழ்ச்சி வென்றது. சூழ்ச்சி அறி யாதவர் திரு. வி. க; ஆச்சாரியாரின் சூழ்ச்சிக்கு இரை யானுர்.

ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதுக்கு முன் தமிழ் நாட்டு அரசியல் வானில் மும்மணி என ஒளி வீசியவர் முவர். ஒருவர் டாக்டர் வரதராஜலு நாயுடு; இன்ைெருவர் பெரியார் ஈ வே. ரா; மற்றாெருவர் திரு. வி. க. இம்மூவரும் காங்கிரசில் இருந்தவரை ஆச்சாரியார் முதலிடம் பெற முடியவில்லை.

வரதராஜலுவும், பெரியார் ஈ. வே. ரா. அவர்களும் காங்கிரசை எதிர்த்து, எதிர் முகாம் அமைத்துக்