பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

100

மதிப்புக் கொண்டிருந்தனர். அம்மதிப்பை மெய்ப்பிக்க ஒரு வாய்ப்பும் கேர்ந்தது.

உப்புச் சத்தியாக்கிரகம் ஓய்ந்த பின் ஓரிரண்டு ஆண்டுகளில் சிறை சென்றவர் பலரும் மீண்டனர். அடுத்து என்ன? ஸ்தல ஸ்தாபனங்களையும், சட்ட சபைகளையும் காங்கிரசே கைப்பற்றும் திட்டம்.

தமிழ் காட்டுக் காங்கிரஸ் தலைமை பீடத்திலே இருந்தவர் சத்தியமூர்த்தி. 1934 ல் வடார்க்காடு ஜில்லா போர்டு தேர்தல். அத்தேர்தலில் காவேரிப் பாக்கம் வட்டாரத்தில் கின்று போட்டியிடும் வேட்பாளராக ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் பெயர் முனிசாமி முதலியார். காலையில் அவர் பெயரை அறிவித்தது. தமிழ் நாட்டுக்காங்கிரஸ்; மாலையில் அதனை மாற்றியது. மற்றாெருவர் பெயரை அறிவித்தது. பெயர் மாற்றத் துக்குக் காரணம் என்ன? காரணம் சொல்லவா வேண்டும்? ஊழல்; ஊழல்.

காவேரிப்பாக்கம் முனுசாமி முதலியாரும், டாக்டர் மாசிலாமணி முதலியாரும் திரு. வி.க. வைக் கண்டனர்; ஊழல் நிகழ்ந்ததைக் கூறினர்.

திரு. வி. க. என்ன செய்தார்? தமிழ் நாட்டுக் காங்கிரஸ் செயலாளரைக் கண்டார். இழைத்த அநீதிக்கு மாற்றுத் தேடுமாறு வேண்டினர். பயன் வி8ளயவில்லை.

சத்தியமூர்த்தி அப்போது டில்லியில் இருந்தார்; அவருக்குத் தந்தி கொடுத்தார். பயனில்லை. சக்கர வர்த்தி இராஜகோபாலாச்சாரியாரைக் கண்டார். நியாயம் வழங்க வேண்டினர். பயன் விளையவில்லை.