பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

1 03

காங்கிரஸ் அங்கத்தினரே பெரும்பான்மையினராக உள்ள ஜில்லா போர்டில் காங்கிரஸ் அல்லாதவர் ஒருவர் வெற்றி பெற்றது எவ்வாறு?

காரணம் சொல்லவா வேண்டும்? காங்கிரஸ்காரர் எல்லாரும் கண்ணப்ப முதலியாருக்கு வாக்களிக்க வில்லை. பெரும் பான்மையோர் நவாப் அப்துல் ஹக்கீமுக்கே வாக்களித்தனர். காரணம்? ஊழல்; ஊழல.

ஊழல் காற்றம் வடார்க்காடு ஜில்லா முற்றிலும் வீசியது; தமிழ் காடு முழுவதும் வீசியது. ஊழலுக்குக் காரணம் எது? தமிழ் காட்டுக் காங்கிரஸ் கூட்டம் கல்ல முறையில் கடந்திருந்தால் ஊழல் ஏற்படுமா? ஏறபடாது அன்றாே!

தமிழ் காட்டுக் காங்கிரசின் ஊழல் போக்க எண்ணினர் திரு. வி. க. எண்ணம் வேலூரில் செயலா கியது. அங்கே ஒரு பெருங்கூட்டம் கூடியது. அக் கூட்டத்தில் தமது கருத்தை வெளியிட்டார்.

வங்காளத்தை உங்களுக்கு கினேவூட்டுகிறேன். அங்கே இரண்டு மாகாண காங்கிரஸ் அமைப்புகள் இருத்தல் உங்களுக்குத் தெரியும். நாமும் ஒரு மகா காடு கூட்டிப் புது மாகாண காங்கிரஸ் அமைக்க முயலல்வேண்டும். அவ்வமைப்பு அகில இந்திய காங்கிரசின் நோக்கத்தைத் தமிழ் காட்டின் மீது திருப்பும். அப்பொழுதே கியாயம் பிறக்கும். தமிழ் காட்டுக் காங்கிரஸ் துய்மை எய்தும். இப்புனிதத் தொண்டுக்கு உங்கள் துணையை காடி இங்கே போந்துள்ளேன். என்றார். *

  • திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள்