பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

11. தொழிலாளர் இயக்கமும் திரு. வி. க.வும்

ஆயிரத்துத் தொளாயிரத்து எட்டாம் ஆண்டு. கமது காட்டில் சுதேச இயக்கக் கிளர்ச்சி எழுந்த காலத்தில் பிரிட்டிஷ் பார்லிமெண்டு அங்கத்தினர் சிலர் இந்தியா நோக்கினர். அவருள் ஒருவர் கீர் ஹார்டி என்பவர். பிரிட்டிஷ் தொழிற் கட்சித் தலைவர்.

அவர் சென்னையில் சில காள் தங்கியிருந்தார். அப் போது தமக்குத் தேவையான பொருள்களே வாங்கும் பொருட்டு ஸ்பென்ஸர் கம்பெனிக்கு வருவார்.

திரு. வி. க. அவர்கள ஸ்பென்ஸர் கம்பெனியில் ஒரு சிறு கணிதராயிருந்தமையின் கீர் ஹார்டியை நெருங்கி நேரே பார்க்கும் வாய்ப்புப் பெற்றார்.

கீர் ஹார்டியின் வரலாறு சுருக்கமாகப் பத்திரி கையில் வெளியாயிற்று. அவ்வரலாறு திரு.வி.க. கெஞ்சில் தொழிலாளர் உலகைப் பதிவித்தது. அன்று முதல், சமயம் நேர்ந்தபோதெல்லாம தொழிலாளர் பற்றிய நூல்களை ஆராய்ந்து வந்தார் திரு.வி.க.

சென்னை ஸ்பென்ஸர் கம்பெனியை விடுத்து. வெஸ்லி கல்லூரியின் தலைமைத் தமிழாசிரியராயிருந்த போது ஒரு நாள்,