பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

9

நான் மாறினேன். மனம் மாறினேன். விலகும் எண்ணம் பறந்தோடியது.

நாட்கள் சென்றன. பிரிக்க இயலாத பாசம் எங்கள் இருவரையும் பிணைத்தது. என்னை விட்டுப் பிரிய மனமில்லாத வர் ஆனர் அவர். நானும் அவரைப் பிரியும் மனமில்லாதவன் ஆனேன்.

  அம்மையார் ஒருவர் சமூக சீர்திருத்தத் தொண்டர்; அடிக்கடி வருவார் திரு.வி.க.வைக் காணும் பொருட்டு. அவரைப் பற்றித் தவருன கருத்துக் கொண்டிருந்தேன் நான். எனது கருத்தை நான் ஒளித்தேனல்லன். திரு.வி க. விடமே தெரிவித்தேன். திரு.வி.க ஏதும் பதில் கூறினர் அல்லர். புன்முறுவல் பூத்தார்.

மார்கழி மாதத்திலே ஒரு நாள் விடியற்காலம், திரு.வி.கவை அழைத்துச் செல்ல வந்து வாயிலில் நின்றது ஒருகார். காரினின்றும் இறங்கி வந்தனர் மூவர். மூவருள் ஒரு

வர் அம்மையார். அவரே நான் குறிப்பிட்ட அம்மையார்.

மற்ற இருவரும் சைவப் பிரசங்கிகள். கழுத்திலே ருத்திராட்சம். இடுப்பிலே பட்டு. உடம்பு முழுதும் பட்டை பட்டையாகத் திருநீறு.

நால்வர் பிரயாணம் செய்யக்கூடிய இடத்தை இவ்விரு வரின் உடல் அடைத்து விட்டது. திரு. வி. க. வுக்கும் அம்மையாருக்கும் நெருங்கி உட்காரத்தக்க இடமே இருந் தது. திரு.வி.க வை அழைத்துச் சென்றார் அம்மையார். காரில் ஏறி அமர்ந்தார். கார் புறப்பட்டது.

சென்னையினின்றும் நூறு மைல் அப்பால் உள்ள ஓர் இடம். அங்கே ஒரு நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் பங்கு கொள் ளும் பொருட்டே இந்நால்வரும் சென்றனர்.

மார்கழி மாதம். விடியற் கால நேரத்திலே காரில் வேகமாகச் சென்றால் எப்படியிருக்கும்?

குளிர்! குளிர்! தாங்கி முடியாத குளிர்! சைவப் பிரசங்கிகள் என்ன செய்தார்கள்? கம்பளிச் சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டார்கள்.