பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

111

அவ்வாறு காணப்பட்ட தொழிலாளர் சங்கங்கள் பல. சிறப்பாகக் குறிக்கத்தக்கன சில. அவை வருமாறு: எம். அண்ட் எஸ். எம். தொழிலாளர் சங்கம், டிராம்வே தொழிலாளர் சங்கம், மண்எண்ணெய்த் தொழிலாளர் சங்கம், அச்சுத் தொழிலாளர் சங்கம், காவிதர் சங்கம், தோட்டிகள் சங்கம், அலுமினியம் தொழிலாளர் சங்கம் ஐரோப்பிய வீட்டுத் தொழிலாளர் சங்கம், தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம் (காகை)கோவை நெசவுத் தொழிலாளர் சங்கம், மதுரை நெசவுத் தொழிலாளர் சங்கம் முதலியவை.

இவ்வாறு தென்னுட்டில் எழுந்த தொழிலாளர் விழிப்புணர்ச்சி, காடு முழுவதும் பரவலாயிற்று. பம்பாய், கான்பூர், கல்கத்தா, காகபுரி முதலிய பல இடங்களிலும் தொழிலாளர் சங்கங்கள் தோன்றின.

தொழிற் சங்கங்களில் ஈடுபட்டோருள் பெரும் பாலோர் காங்கிரஸ்காரர்; ஜஸ்டிஸ் கட்சியினரும் சிலர் இருந்தனர்.

தொழிலாளர் தம் சம்பள உயர்வு, கேரக் குறைவு, இராப்பாடசாலை அமைத்தல், சுகாதாரம் முதலியன பற்றியே அந்நாளில் தொழிலாளர் கூட்டங்களில் பேசப் பட்டன. பொருளாதார சமதர்ம உணர்ச்சியூட்டியவர் ஒரிருவரே. அவருள் ஒருவர் திரு.வி.க.

சென்னைத் தொழிலாளர் சங்கம் பிறந்த சில வாரத் துள் எதிர்ப்புக்கள் பானங்களெனப் பாய்ந்தன. அக் காளில் சென்னைக் கவர்னராயிருந்தவர் லார்ட் பெண்ட் லண்டு. அவர் வாடியாவை அழைத்தார்; எச்சரிக்கை செய்தார். இந்தியாவுக்குத் தொழிலாளர் இயக்கம் அவசியமில்லை எனும் கருத்துக் கொண்ட கட்டுரை கள் பல பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.