பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

112

அவற்றுக்கெல்லாம் தேசபக்த'னில் மறுப்பு, எழுதி வந்தார் திரு.வி.க. நியூ இந்தியா’ பத்திரிகையும் திரு.வி.க. வுக்கு ஆதரவு கல்கியது.

ஆயிரத்துத் தொளாயிரத்து இருபதாம் ஆண்டு மார்ச்சு மாதம் 21ந் தேதி சென்னையில் முதன் முறையாக மாகாணத் தொழிலாளர் மகாநாடு கூடியது மகா நாட்டுத் தலைவர் திவான் பகதூர் கேசவப்பிள்ளை வரவேற்புத் தலைவர் திரு.வி.க. உள்ளுரினின்றும், வெளியூர்களினின்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் கூடினா.

தொழிலாளர் சங்கங்கள் ஆங்காங்கே காள் தோறும் தோன்றி வருகின்றன. அவை வழி துறை யில்லாமல் வளர்ந்து வருவதால் இடையில் பலஇடர்கள் கேர்ந்துவிடும். ஆதலால் எல்லாத் தொழிற் சங்கங் கட்கும் நடுநாயகமாக ஒரு மத்தியச் சங்கம் இருத்தல் வேண்டும். அச்சங்கத்தில் எல்லாத் தொழிற் சங்கங் களும் சேர்தல் வேண்டும்’ என்று கூறினர் திரு.வி.க.

இதன் விளைவு என்ன? ஆயிரத்துத் தொளாயி ரத்து இருபதாம் ஆண்டு சூலை மாதம் காலாக் தேதி மத்தியச் சங்கம் சென்னையில் தோன்றியது. அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார் திரு.வி.க.

கமது காட்டின் தொழிற்சங்க இயக்கத்துக்கு. வித்துான்றியவர் திரு. வி. க. என்றால் அது மிகை யன்று.

சென்னை மவுண்டு ரோடு ஜெனரல் பாட்டர்ஸ். ரோடில் காங்கிரஸ் மாளிகை இருக்கிறதே, அந்த வெளி. அம்மகா காட்டுக்குத் தலைமை வகித்தவர் திவான் பகதூர் கேசவபபிள்ளை.