பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

113

ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்து ஓராம் ஆண்டு சூன்மாதத்திலே சென்னை பக்கிங்காம் கர்நாடிக் மில் தொழிலாளர் பதின்மூவாயிரம் பேர் வேலை கிறுத் தம் செய்தனர். அவ்வேலை நிறுத்தம் சில நாட்களில் முடியவில்லை. ஆறு மாதம் தொடர்ந்தது.

அந்தக் காலத்தில் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் இல்லை. எனவே, கலகம் குழப்பம் யாவும் மலிந்தன. போலீசார் துப்பாக்கி கொண்டு சுட்டனர்.

இந்த கெருக்கடியான நேரத்தில் திரு.வி.க எங்கிருந் தார்: தொழிலாளர் பக்கம் கின்றார்,வேலை நிறுத்தமாகத் தோன்றியது, வகுப்புக் கலவரமாக மூண்டது.

அங்காளில் சென்னை கவர்னராக இருந்தவர் எவர்? வில்லிங்டன். ஜஸ்டிஸ் கட்சியினரே மந்திரிகளாக இருந்தார்கள்.

வில்லிங்டன் நீலகிரியில் இருந்தார்; சென்னைக்கு விரைந்தார். எதன் பொருட்டு: திரு வி. க. வை நாடு கட்த்தும் பொருட்டு,

திரு.வி.க.வை அந்தமானுக்கு அனுப்பப் போகிறார் கவர்னர் என்ற வதந்தி எழுந்தது. அவ் வதந்தி ஊர் முழுதும் அலராயிற்று.

விலிங்டன் என்ன செய்தார்? திரு.வி.க.வுக்கு அழைப்பு விடுத்தார். அதற்கிணங்கி மாலை ஆறு மணிக்குக் கவர்னர் மாளிகை சென்றார் திரு. வி. க.

அவருக்கு முன்னரே சர்க்கரைச் செட்டியாரும் வேறு சிலரும் அங்கே இருந்தனர். ஆறு மணிக்கு வந்தார் கவர்னர்.

தி.-8