பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

115

பக்கிங்காம் கர்நாடக தொழிலாளரிடையே இருபத் தைந்து ஆண்டுகள் தொண்டு புரிந்தார் திரு.வி.க. இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் கடந்த வேலை கிறுத்தம் ஒன்றா இரண்டா? பல ; பலப்பல. வேலை கிறுத்தம் என்ற செய்தி கேட்டால் உடனே விரைந்து ஒடுவார் திரு.வி.க. தொழிலாளர் முன்னே நிற்பார். அமைதி காப்பார். தொழிலாளர் பொருட்டு வாதாடு வார்.

வேலை நிறுத்தங்கள் கதவடைப்புகள் முதலிய வற்றால் கன் மையும் விளையும்; தீமையும் விளையும். தீமை நேருங்கால் தொழிலாளர் பாய்வர்; உறுமுவர்.

அவற்றில் மூழ்குவார் திரு.வி.க., எழுவார். மூழ்கி எழ எழப் பொறுமையும் அமைதியும் அவரைச் சாரும்.

தொழிலாளர் சங்கங்களை ஏணியாக உபயோ கித்துப் படியேறிப் பெரிய பெரிய பதவிகளில் அமர்ந்து அரசியல் பயன் பெற்றாேர் பலர்.

ஆனல் திரு.வி.க அவ்வாறு ஏதும் செய்தாரிலர். இதுவே அவர்தம் பயன் கருதாத் தொண்டுக்கு ஒர் எடுத்துக்காட்டு ஆகும். $

ஆயிரத்துத் தொளாயிரத்து காற்பத்து இரண்டாம் ஆண்டு. பக்கிங்காம் கர்நாட்டிக் மில்லில் சிறு குழப்பம். ஸ்பின்னிங் டிபார்ட்மெண்டு இளைஞர்கள் உள் வேலை நிறுத்தம் செய்தார்கள். ஆயுத பாணியாய் காத்திருந்த போலிஸ் படை மில்லுக்குள் நுழைந்தது; துப்பாக்கி கொண்டு சுட்டது. (11-3-1942) மாண்டனர் எழுவர்; மில்லுக்கு வெளியேயும் துப்பாக்கி முழங்கியது. இருவர் மாண்டனர். தொழிலாளர் நடுவே சென்று கொண் டிருந்தார் திரு.வி.க. துப்பாக்கியினின்றும் விறிட்டு,