பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

117

தொழிலாளர் எவ்வித வன்முறையிலும் இறங்கின ரல்லர். சென்னையில எவ்வித பூகம்பமும் ஏற்பட்டுவிட வில்லை.

அமைதியான முறையில் திரு.வி.க தலைமையில் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையை வற்புறுத்தி ர்ைகள்.

அது கண்டு சீறியது காங்கிரஸ் அரசாங்கம். திரு.வி.க.வை வீடு காவலில் வைத்தது. அவர் இருந்த வீட்டையே சிறைச்சாலை யாக்கியது. வீடு விட்டு வெளி யேருமல் தடுத்தது. போலீசைக் காவல் வைத்தது.

வெட்கம்! வெட்கம்! வாழ்நாள் முழுவதும் காங் கிரஸ் காங்கிரஸ் என்று ஓடி ஒடிப் பாடுபட்ட ஒருவரை -பட்டி தொட்டி எங்கும் காங்கிரஸ் முழக்கம் செய்த ஒருவரை-அதே காங்கிரஸ் அரசாங்கம் சிறை வைத்ததும் என்னே கொடுமை! கொடுமை! கொடுமை!!

இக்கொடுமை புரிந்தவர் எவர்? திரு.வி.க அவர் களின் பேச்சுக் கேட்டுக் கேட்டுக் காங்கிரஸ் தொண்ட ராகி, தலைவராகிப் பின் முதன் மந்திரியுமான ஓமந்துTர் இராமசாமி ரெட்டியார்.

மில் தொழிலாளர் இச்செய்தி அறிந்தனர். அதா வது திரு.வி.க. காவலில் வைக்கப்பட்ட செய்தி. பெரம் பூரிலிருந்து புறப்பட்டு இராயப்பேட்டை கண்ணினர்.

கணபதி முதலித் தெருவில் வாழ்ந்து வந்தார் திரு.வி.க. தொழிலாளர் வருதல் அறிந்தார். வீட்டு மாடியின் முன்புறம் வந்து அமர்ந்தார். வீடு காத்த போலீஸ் என் செய்தது? தொழிலாளரைத் தடுத்து கிறுத்தியது.