பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

120

டாக்டர் கடேசமுதலியார் ஒரு சங்கம் அமைத்து நடத்தி வந்தார். அச்சங்கத்தின் பெயர் திராவிட சங்கம்’ என்பது. அச்சங்கத்தில் ஒரு முறை திரு. வி. க. பேசினர். அதாவது 1912ம் ஆண்டு. அப்பேச்சு இரு வரையும் கண்பராக்கியது. அது முதல் இறுதிவரை கடேசமுதலியார் திரு. வி. கவின் நண்பராக விளங் கிர்ை.

திரு. வி. கவை காடுகடத்த எண்ணிய லார்ட் வில்லிங்டனைத் தடுத்து நிறுத்திய சக்தி எது? டாக்டர் சி. நடேசமுதலியாரின் அன்பு; அன்பு.

  • 1920ம் ஆண்டு நிகழ்ந்த தொழிலாளர் பெருந் தொல்லையின் போது டாக்டர் நடேசமுதலியார் தியாக ராய செட்டியாரையும் பனகல் ராஜாவையும் துரங்க விடுவதில்லை. அல்லும் பகலும் என்னைப்பார்த்த வண்ணமிருப்பர். ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியிலே தொழி லாளர் தலைவர்கட்கு எவ்வித துன்பமும் விளைதலாகாது என்று பாடுபட்டவருள் கடேசமுதலியாரும் ஒருவர்’ இவ்வாறு குறிப்பிடுகிறார் திரு. வி. க.

ஜஸ்டிஸ் கட்சியின் தந்தை சர். பி. தியாகராய செட்டியார். அவரிடம் திரு. வி. க. வை ஆற்றுப் படுத்தியவர் டாக்டர் சி. நடேச முதலியார்,

செட்டியாரின் அரசியல் கொள்கை திரு. வி. க வை விழுங்கவில்லை. செட்டியாரின் குணம் திரு. வி. க வை விழுங்கியது.

குண மலையாக விளங்கினர் செட்டியார். அக்குன மலை திரு. வி. க வைக் காந்தமென இழுக்கும். அவர் மொழி கேட்கத் திரு. வி. க. வின் செவி விரையும்.

  • திரு. வி. க. வாழ்க்கை குறிப்புக்கள்.