பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

195

ஒளி செய்தது. அவர் மனைவியார் தோற்றம் மணி பூத்த பொன் வண்ணமாகப் பொலிந்தது. அவர்

ஜமீந்தாரியாகவும். இவர் ஜமீந்தாரணியாகவும் காணப்

பட்டனர்.’’ என்று குறிப்பிடுகிறார் திரு. வி. க.

அந்நாளில் காங்கிரஸ்தொண்டு செய்தார் பெரியார்; ஒத்துழையாமையில் உறுதி கொண்டார்; பல முறை சிறை சென்றர். அவர் உழைப்பை கன்கு உண்டு கொழுத்தது காங்கிரஸ்.

  • அவர், காங்கிரஸ் வெறி கொண்டு நானுபக்கமும் பறந்து பறந்து உழைத்ததை யான் கன்கு அறிவேன். காயக்கரும் கானும் சேர்ந்து சேர்ந்து எங்கெங்கேயோ தொண்டு செய்தோம். காடுமலையேறியும் பணி புரிந்தோம்.

“அவர் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து சுயமரியாதை இயக்கங்கண்டு, பிற்போக்குப் பிரச்சாரம் செய்தார். அதல்ை தென்னுட்டுக்குக் கேடு விளைதல் கண்டு யான் எதிர்ப்பிரச்சாரம் செய்தேன். இருவர் போர்ையும் தென்னடு வேடிக்கை பார்த்தது. போரிட்டோம்; பத்திரி கையில் போரிட்டோம். மேடையில் போரிட்டோம். என் உடல் நலன் குன்றும் வரை யான் முன்னணியில் கின்று போரிட்டே வந்தேன். போர் உச்சம் பெற்ற காலத்திலும் நாயக்கர் வீட்டுக்கு யான் செல்வேன்; என் வீட்டுக்கு அவர் வருவர். எங்கள் கட்புக் குலையவே இல்லை. ஒரே மேடையில் இருவரும் பேசுவோம். அவர் கொள்கையை அவர் சொல்வார். என் கொள்கையை யான் சொல்வேன். ஒரே இடத்தில் உண்போம்; உறங்குவோம். நட்பு முறையில் உறவாடுவோம்.’

திேரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள்.