பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

11

நவசக்தி அலுவலகம் இராயப்பேட்டையில் இருந்த போது காலை பத்து மணிக்குத்தான் நான் வேலைக்குச் செல்வேன்.

பிற்பகல் இரண்டு மணிக்குள் அன்றைய வேலையை முடித்து விடுவேன். அச்சுக் கோப்பதற்குக் கொடுக்க வேண்டுவனவற்றை யெல்லாம் அச்சுக்கூட மேற்பார்வை யாளரிடம் கொடுத்துவிடுவேன்.

வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கே காரியாலயத்தில் இருப்பேன். காரணம் என்ன? வெள்ளிக்கிழமை தோறும் தபாலில் பத்திரிகையை அனுப்பிடல் வேண்டும்.

வியாழக்கிழமை பகல் மூன்று மணிக்குள் அச்சு யந்திர வே ைமுடிதல்வேண்டும். அப்போதுதான் வெள்ளிக்கிழமை தபாலில் பத்திரிகை சேரும்.

வியாழக்கிழமை பகல் பன்னிரண்டு மணிக்கு எனது. வேலை முடிந்துவிடும்.

சாப்பிட்டுவா’ என்று கூறி, இரண்டுரூபாய் கொடுப்பார் பெரியவர்.

திரு.வி. உலகநாத முதலியாரைப் பெரியவர் என்றே நாங்கள் அழைப்போம். திரு.வி.க.வைச் சின்னவர்’ என்போம். அந்த இரண்டு ரூபாயை வாங்கிக்கொண்டு சாப்பாட்டு ஒட்டலுக்குச் செல்வேன்.

வெஸ்லி கல்லூரி எதிரில் உட்லண்ட்ஸ் ஒட்டல் இருந்தது. அந்தக் காலத்தில் அந்தப் பகுதியில் அதுவே சிறந்த ஒட்டல்’

சாப்பாடு ஒரு ரூபாய். சாப்பிட்டுவிட்டு மீதி ஒரு ரூபாயைக் கொண்டுவந்து பெரியவரிடம் கொடுத்து விடுவேன்.

திரு.வி.க வருவார். சாப்பிட்டாயா தம்பி என்று வினவுவார். சாப்பிட்டேன்’ என்பேன்’ எங்கே?’ என்று கேட்பார். அந்த ஒட்டலின் பெயரைச் சொல்வேன், பெரியவர் எவ்வளவு கொடுத்தார்?’ என்று கேட்பார்.