பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

14. பெண் உரிமையும் திரு. வி. க.வும்

பெண் உரிமையின் பொருட்டு இந்திய நாட்டிலே கொடி தூக்கிய முதல்வர் இராஜாராம் மோகன்ராய். அவரைத் தொடர்ந்து வட இந்தியாவிலே பலர் பெண் உரிமைக் குரல் எழுப்பினர். அவர்களைப் பின்பற்றித் தமிழ் காட்டிலே பெண் உரிமை முழக்கம் செய்த தனிப் பெரியார் திரு. வி. க.

இராயப்பேட்டை சகோதர சங்கத்தின் சார்பில் பல பள்ளிக் கூடங்கள் கடந்தன. அவற்றுள் ஒன்று “பவானி பாலிகா பாடசாலை’ இப்பாடசாலை தொடங் கப்பட்ட போது திரு. வி. க. ஆயிரம் விளக்குப் பள்ளி யில் ஆசிரியராக இருந்தார். அதனுல் பள்ளியுடன் கேர் தொடர்பு கொள்ளல் இயலவில்லை. பின்னே அவர் தேசபக்தன் ஆசிரியராக அமர்ந்தபோது அப்பள்ளி அவர் கேர் பார்வையில் வந்தது.

அப்பள்ளியைப் பல வழியிலும் புதுமை பெறச் செய்தார் திரு. வி. க. பள்ளியை காட்டு முறையில் கடத்தினர். சென்னைக்கே ஓர் எடுத்துக் காட்டாக அப்பள்ளி விளங்கவேண்டும் என விரும்பினர்; உழைத் தார். ஈச பக்தியும், தேச பக்தியும் ஊட்டத்தக்க முறைகளை வகுத்தார்; காட்டுப் பண்பை உயிர்ப்பிக்கும்.

9---.9