பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

131

தொரு பெண் வந்தாள். புதுப் பெண்ணின் வருகை கண்டனர் தெருப் பெண்கள். அப்பெண்ணின் வரலாறு அறிந்தனர். அப்பெண் ஒரு கிராமத்தான் மனைவி, அவளை எப்படியோ ஏமாற்றி அழைத்து வந்துவிட்டான் அாசசகன.

இச்செய்தி அறிந்தார் இளம் திரு.வி.க. கை ரேகை --குறி பார்த்துச் சொல்லும் ஒருவனே அழைத்தார். புதுப் பெண்ணின் வரலாற்றை அவனுக்கு அறிவித் தார். அப்பெண்ணின் மனத்தை மாற்றி ஊருக்கு அனுப்பிவிடுமாறு சொன்னர். குறி சொல்பவனும் அவ்வாறே ஆகட்டும் என்று போனன். கிராமத்துப் பெண்ணைக் கண்டு குறி சொன்னன். இரண்டரை கூலி யும் பெற்றான், இரவு வந்தது. பொழுது விடிந்தது. பெண்ணைக் காணுேம். அர்ச்சகன் அங்குமிங்கும் தேடிக் கொண்டிருந்தான்.

திரு.வி.க.வின் நண்பர் ஒருவர். அவர்தம் முதல் மனைவி இறந்தாள். மறுமணம் செய்து கொண்டார் கண்பர். முதல் மனைவிக்குப் பிறந்த மகள் ஒருத்தி. கைம்மை எய்தினுள். அப்பெண்ணை அவளது மாற்றாந் தாய் துன்புறுத்தினுள். பெரிதும் துன்புறுத்தினுள். அது கண்டார் தந்தை, மனம் கொந்தார். மனைவியின் உள்ளத்தை மாற்ற முயன்றார். ஒரு வழியிலா? பல வழிகளிலும் முயன்றார். முயற்சி வெற்றி பெறவில்லை. கவலையுற்றார் கண்பர்; உடல் மெலிந்தார்.

உடல் மெலிந்த அவரைக் கண்டார் திரு.வி.க. மெலிவுக்குக் காரணம் யாதென்று கேட்டார். அவர்தம் வீட்டு கிலை கூறினர்; வருந்தினர். மகள் வெளித் தாண்டுவாளோ? கெட்டுப் போவாளோ? தற்கொலை செய்து கொள்வாளோ? என்று கலங்கினர் நண்பர். அவரது கலக்கம் திரு.வி.கவையும் கலக்கியது.