பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

137

புரசையிலே சுந்தரம்பிள்ளை தெருவிலே ஒரு வீர சைவரின் இல்லம். அந்த இல்லத்திலே பெருங்கூட்டம் கூடியிருந்தது. அக்கூட்டத்திலே,

  • காளமேகம் ஒருருக்கொண்டு நெற்றியில் நீற னிந்து, கழுத்தில் அக்கமாலை பூண்டு, இடுப்பில் பீதாம் பரம் புனைந்து சொன்மழை பொழிந்தது” கண்டார் இளம் திரு.வி.க.

காளமேகமெனக் காட்சி தந்த கதிரைவேற் பிள்ளையின் கோலமும் பேச்சும்’ திரு.வி.க.வை ஆண்டன. அன்று முதல் அவர்தம் பேச்சு மேடைகள் திரு.வி.க.வைக் காந்தமெனக் கவர்ந்தன.

கதிரைவேற்பிள்ளையின் சேர்க்கையும் பிறவும் என் செய்தன? இராயப்பேட்டையில் ஒரு சைவசபை காணு மாறு திரு.வி.க.வைத துாண்டின. அத்துரண்டுதலால் 1903ம் ஆண்டு பாலசுப்பிரமணிய பக்தஜன சபையைத் தோற்றுவித்தார்.

பாலசுப்பிரமணிய பக்தஜனசபை முதன்முதல் முத்து முதலித் தெருவில் குத்தம்பாக்கம் அப்பாசாமி முதலியார் வீட்டின் அறையில் அமைக்கப்பட்டது.

காலையில் அரைமுண்டு உடுத்திக் கையில் செம்பு தாங்கி, ஸ்ரீபாலசுப்பிரமணிய பக்தஜனசபைப் பெரு மானைப் பூசிக்கத் தெருவழியே செல்வார் திரு.வி.க.

அங்கிலையில் அவரைக் காணும் நண்பர் கெஞ்சம் இரங்கும். திரு.வி.க. சாமியாராகிவிடுவார் என்று

பலரும் எண்ணினர்.

திரு. வி. க வாழ்க்கைக் குறிப்புக்கள்