பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

12

‘இரண்டு ரூபாய் கொடுத்தார். சாப்பாட்டுச் செலவு ஒரு ரூபாய். மீதி ஒரு ரூபாயைப் பெரியவரிடம் கொடுத்து

விட்டேன்’ என்று சொல்வேன்.

“ஏன் திருப்பிக் கொடுத்தாய்? சுவீட் வாங்கி நன்கு சாப்பிடக் கூடாதோ?’ என்று கேட்பார்.

ஒரு ரூபாய் சாப்பாடே எனக்கு அதிகம்’ என்பேன். ‘நன்முக நீ சாப்பிட வேண்டும் என்று தானே இரண்டு ரூபாய் கொடுக்கச் சொன்னேன். நீ ஏன் சாப்பிடாமல் திருப்பிக் கொடுத்தாய்?’ என்று என்னைக் கடிந்து கொள்வார்.

நாள்தோறும் காலை ஒன்பது மணிக்குச் சுடுசோறு உண்பேன். பிறகு நவசக்தி அலுவலகம் சேர்வேன்.

இடைவேளை உணவுக்காகத் தோசை செய்து கொடுப் பார் எனது தாய். அதைக் கொண்டு வருவேன்.

இடைவேளையில் ஒருநாள் திரு.வி.க. கீழே இறங்கி வந்தார். அப்போது நான் தோசை தின்று கொண் டிருந்தேன்.

என்ன சாப்பிடுகிறாய்?’ என்று கேட்டார் அவர். தோசை’ என்றேன் நான். ‘'நீ சிறுபிள்ளை. ஏன் தோசை கொண்டு வருகிறாய்! தயிர்சாதம் கொண்டு வந்து சாப்பிடு. அதுதான் உன் உடம்புக்கு நல்லது’ என்றார்.

அன்று முதல் தோசை கொண்டு வருவதை நிறுத்தி விட்டேன். தயிர்சாதம் கொண்டு வரத் தொடங்கினேன்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் பல. நாள்தோறும் பகல் மூன்று மணிக்கு மாடியினின்றும் இறங்கி வருவார் திரு.வி.க. வரும்போது அன்றைய தினம் தமக்கு வந்த கடிதங்களையும் கொண்டு வருவார். எனது மேசை எதிரில் உட்கார்ந்து கொள்வார். கடிதங்களுக்கு பதில் எழுதுமாறு கூறுவார். நான் எழுதுவேன். அவர் சொல்வார். பதில் சுருக்கமாக இருக்கும். எவ்வளவு தேவையோ அவ் வளவு சொற்களே இருக்கும். தேவையற்ற சொற்கள் இரா.