பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

142

மாண்பை மட்டும் கூறுவர் சிலர். மற்றும் சிலர் பிற மதங்களைப் பழிப்பர். இவ்வாறு பழிப்போரை எளிதில் விடமாட்டார் திரு.வி.க.

பாதிரிமார்க்கும் திரு.வி.க.வுக்கும் நிகழ்ந்த வாதங் கள் பல. அவை பெரும்பாலும் பாவ மன்னிப்பு பற்றி யனவாக இருக்கும். பாவம் ஆதியா? அநாதியா? என்று பலரைக் கேட்பார். அவர் தரும் விடை பொருந்திய விடையாகக் கருதமாட்டார்.

ரெவரண்டு எட்டி என்பார் பின்வருமாறு கூறினர்:

பாவம் ஆதியோ அகாதியோ எப்படியேனும் இருக்கட்டும். அது பற்றிய கவலை எங்களுக்கில்லை. மனிதன் பாவம்.செய்கிருன். அவன் பாவத்தினின்றும் விடுதலையடைய அலைகிருன். அவ்வாறு அலையும் அவன் கிறிஸ்துவை கினைத்துத் தான் நிகழ்த்திய பாவததை உண்மையாக முறையிட்டு அழுவானுயின் அவன் பாவ மன்னிப்புப் பெறுகிருன். தன் பாவத்தை முறையிட்டு அழுவோனுக்கு மன்னிப்பு வழங்கி அவனே ஆட்கொள்ளவே கிறிஸ்து உலகில் பிறந்தார்.”

இப்பதில் கேட்ட திரு. வி. க. வின் உள்ளம் நெகிழ்ந்தது.

ஆயிரம் விளக்குப் பள்ளியில் திரு.வி.க ஆசிரியரா யிருந்தபோது ஜான் ரத்தினம் அவர்களின் நட்புக் கிடைத்தது. அவர்தம் கூட்டுறவு திரு.வி.கவுக்கு பைபிலின் பொருளை விளக்கியது.

ஒரு நாள் பீட்டர்ஸ் ரோட் வழியே ஆயிரம் விளக்கு கோக்கி நடந்து கொண்டிருந்தார் திரு.வி.க. முறை யீடு-அழுகை-பாவ மன்னிப்பு ஆகியவற்றின் நுட்பங் கள் திடீரென அவருக்கு விளங்கின. முறையீடும்,