பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

148

1920 ம் ஆண்டு சத்தியாக்கிரகத்தைப் பற்றிப் பேசுமாறு வேலூருக்கு அழைக்கப்பட்டார் திரு. வி. க. அன்றைய கூட்டத்தில் பழைய இந்திய காகரிகத்தை யும், இடைக் காலத்தில் அஃதுற்ற நிலையையும் க்காளில் அக்காகரிகம் வீழ்ந்துபட்ட கிலையையும் விளக்கினர். இந்தியா மீண்டும் பழைய நிலை அடைய வேண்டுமாயின் அதற்குரிய வழி சத்தியாக் கிரகமே என்று கூறினர். வழக்கம் போலவே சுப்பிர மணிய சாஸ்திரியார் திரு. வி. க. வைச் சாப்பாட்டுக்கு அழைத்தார். வீட்டிலே ஒரிலே போடப்பட்டிருந்தது. இன்னேர் இலையும் போடுமாறு கூறினர் சாஸ்திரியார். *யான் அப்பூதி என்றார். உங்கள் பேச்சு உங்களை நாவரசாக்கிற்று. என்னே அப்பூதியாக்கிற்று’ என்றார்.

அருகில் இருந்தார் கண்ணமங்கலம் இராகவ ஐயர் தாமும் ஓர் இலையைத் தருவித்து அருகில் அமர்ந்தார். மூவரும் உணவு கொண்டனர். சாஸ்திரியார் மனே நிலையையும் இராகவஐயர் மனே நிலையையும் மாற் றியது எது? சீர்திருந்தச் செய்தது எது? அன்பு; அன்பு; திரு. வி. க.வின் அன்பு,

ஆலந்துாரிலே சிவனடியார் திருக்கூட்டம் ஒன்று இருந்தது. சுப்பிரமணிய நாயகர் என்பவர் அதன் அமைச்சராயிருந்தார். அத்திருக் கூட்டத்தில் திரு. வி. க. வின் சொற் பொழிவு அடிக்கடி நிகழும்.

ஒரு முறை சுவாதி கன்னுளில் சுந்தரர் வரலாற் றைப் பேசினர் திரு. வி. க. ஒரு வைதிகப் பிராமணர் வீட்டில் திரு. வி. க. வின் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரு. வி. க. அங்கு உணவு கொள்ளச் சென்றார். அந்த வீட்டு மாமியும் மருகியும் திரு. வி. க. வை உபசரித்தனர். உண்ட இலையை