பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

150

திருவெற்றியூரிலே தியாகேசப் பெருமான் திருக் கோயில் மூலையிலே ஆண்டுக்கொரு முறை எத்தனையோ ஆடுகளையும் எருமைக் கன்றுகளையும் பலியிட்டு வந்தனர். இந்தப் பலியை கிறுத்தப் பெரும்பாடு பட்டது சென்னை ஜீவரட்சகசபை, அச்சபை யுடன் கலந்து தொண்டாற்றினர் திரு. வி. க. இதன் விளைவாக 1940ம் ஆண்டில் அங்கே பலியிடும் வழக்கம் அறவே ஒழிந்தது.

சென்னைக்கு அணித்தே பெரியபாளையம் என்று ஒர் ஊர் உளது. அங்கேயுள்ள அம்மன் கோயில் முன் ஆடித்திங்கள் தோறும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகும். ஜீவரட்சக பிரசார சபை அங்கும் சென்றது. அச்சபையின் சார்பில் திரு. வி. கவும் சென்றார்; பலி நிறுத்தல் பிரச்சாரம் செய்தார்.

வட ஆர்க்காடு ஜில்லாவில் வெட்டு வானம் என்றாேர் சிற்றுார் உளது. அங்கே ஒருகோயில் உளது. எல்லம்மன் கோயில்; கோயிலுக்கு வெளியே பலி கடை

பெறும்.

பலி நிறுத்த வேண்டி ஒரு சங்கம் கண்டார் மெளன சுவாமிகள். சன்மார்க்க சங்கம். அச்சங்கச் சார்பில் ஆண்டு தோறும் பலி கிறுத்த மகாகாடு கடை பெறும். ஒவ்வோராண்டும் மகாகாட்டுத் தலைமை திரு. வி. கவுக்கே வழங்கப்படும். இம் முயற்சியால் அங்கே உயிர்க்கொலை அறவே ஒழிந்து விட்டது.

பள்ளி கொண்டையிலே ஒரு பெண்மணி இளம் பருவத்திலேயே கைம்மை எய்தினர். மகள் விரும்