பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

14

அங்குச் சிறிது நேரம் இருப்போம். பிறகு இருவருமாக அடையாற்றுக்கு நடந்து வருவோம். பஸ்ஸில் ஏறுவோம். நான் மயிலாப்பூரில் இறங்கி விடுவேன். அவர் இராயப் பேட்டை சேர்வார்.

இவ்விதம் நாள்தோறும் நடப்போம், ஒராண்டா? இரண்டு ஆண்டுகளாக? பல ஆண்டுகள். பல ஆண்டுகளில் அவர் எனக்குக் கூறியன பல; பலப்பல. திரு.வி.க. வாழ் வில் நிகழ்ந்தவற்றை மட்டுமா அவர் கூறினர்? இல்லை; இல்லை. இன்னும் எவ்வளவோ?

எங்கள் உரையாடலில் அரசியல் இடம்பெறும். சீர்திருத்தம் வரும். இலக்கியம் வரும். சமயம் வரும் இன்னும் பல.

மகா மகோபாத்தியாய உ.வே. சுவாமிநாத அய்யரின் சுய சரிதம் வெளிவந்து கொண்டிருந்தது.

ஐயரவர்கள் தமது வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிடுகிறார். தாங்களும் தங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதினுல் என்ன?’ என்று கேட்டேன் நான்.
அது வேண்டாம் தம்பி’ என்றார் அவர்.

‘ஏன் வேண்டாம்?’ என்று கேட்டேன். :தமது வரலாற்றைத் தாமே எழுதுவது நமது முன்னேர் மரபு அன்று’ என்றார்,

‘முன்னேர் செய்யாதன பல இன்று நாம் செய்கிருே.ே . முன்னேர் பத்திரிகை நடத்தினரா?’ என்று கேட்டேன்.

அவர் முகத்தில் புன்னகை அரும்பியது. வாய்ப்புக் கிட்டியபோது எல்லாம் அவரை நான் வற்புறுத்தினேன். அவர் தட்டிக் கழித்துக்கொண்டே வந்தார்.

உங்களுக்குப் பிற்காலம் உங்களைப் பற்றிப் பல பொய்களைக் கூறுவர். த.வருண செய்திகளைப் பரப்புவர். அவர்களைப் பொய்ப்பிக்கும் ஆதாரம் ஏதும் இல்லாது போகும்’ என்று ஒரு நாள் சீறினேன்.