பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161

161

திரு.வி.க.விடம் பெரிதும் மன்றாடினர் பன்மொழிப் புலவர். பயனில்லை. உறுதியாக கின்றார் திரு.வி.க. பண முடிப்பு அளிக்கும் முயற்சி கைவிடப்பட்டது.

பிரபலமான நாட்டுக் கோட்டை நகரத்தார் ஒருவர். பெரும் செல்வர்; பெருந் தொழில் அதிபர்; கோடீசுவரன். அவர் ஒருபொழுது திரு.வி.கவைக் காண வந்தார்.

அப்போது திரு.வி.க எங்கிலையில் இருந்தார்? உடல் மெலிந்து பார்வை இழந்து படுக்கையில் கிடந்தார்.

திரு.வி.க.வைத் தம் கண்மணிபோல் காத்துவந்த தமையனர் திரு.வி. உலககாத முதலியாரும் இறந்து விட்டார். அச்சுக்கூட வருவாய் சுருங்கியது. புத்தக விற்பனையும் சுருங்கியது. வாழ்வில் அமைதியில்2ல. புயல்! புயல்!

இத்தகைய கேரத்தில்தான் அப்பெருஞ் செல்வர் திரு வி. க. வைக் காண வந்தார். வந்தவர் என்ன கண்டார்? திரு.வி.கவின் நிலை கண்டார்; உளம் கசிந்தார்.

“எவ்வளவு ஆயிரம் ரூபாய் வேண்டுமாயினும் சரி. தருகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார் செட்டியார்.

திரு.வி.க என் செய்தார்? செக் கைப் பெற்றாரா? இல்லை.

“எனக்குப் பணம் எதற்கு? வேண்டாம். உங்கள் அன்புக்கு நன்றி’ என்றார்.

செட்டியார் சும்மா விட்டாரா? இல்லை. ஆயிரம் ரூபாய் என்று எழுதி செக்கைப் பூர்த்தி செய்தார். யாரும் அறியாமல் திரு.வி.க. வின் தலைப்புறம் வைத்து விட்டார். விடை பெற்றுப் போனர்.

தி.-11