பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

162

அவர் போனபிறகு வந்த ஒருவர் செக் கைக் கண்டார். எடுத்தார். திரு.வி.க.விடம் கொடுத்தார். திரு.வி.க என் செய்தார்? செட்டியாருக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்.

திருவல்லிக்கேணிச் சிவனடியார் திருக்கூட்டம் எனறதொரு சைவ சபை 1908ம் ஆண்டிலே காணப் பட்டது. அக்கூட்டம் பெரிதும் திருவல்லிக்கேணி வாணிபர் பார்வையில் கடந்தது. அதன் முதல் தலைவர் திரு.வி.க. அக்கூட்டத்தின் சார்பில் சுமார் ஏழாண்டு கள் பெரிய புரானப் பிரசங்கம் செய்தார் திரு.வி க. அப்பிரசங்கத்துக்குச் சென்னையின் பல பகுதிகளி னின்றும் பெருங்கூட்டம் திரளும். பெரிய புராணப் பிரசங்கம் ஞாயிறுதோறும் நடைபெற்றது. ஒவ்வொரு பாட்டுக்கும் விரிந்த முறையில் விளக்கம் சொன்னர். பிரசங்கம் சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெறும், பெரிய புராணம் ஒரு சீர்திருத்த நூல் என்று அவர் சொல்வார். அதற்குத் தக்க ஆதாரங்கள் காட்டுவார்.

சிவனடியார் திருக் கூட்டத்தின் ஆண்டு விழா மிக்க சிறப்பாக கடைபெறும். மகேசுவர பூசையின் போது சாதிச் சைவர் தொல்லை தலைவிரித்தாடும். அதனைக் கண்டிப்பார் திரு.வி.க. மகேசுவர பூசையில் சாதி பாராட்டுதல் தவறு என்பார்.

பெரிய புராணப் பிரசங்கத்திலே பரவையார் திருமணப் பகுதி வந்தது. அது பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் பொன்னும் மணி யும் வேய்ந்த கெளரி சங்கம் ஒன்று அன்பளிப்பாகத் திரு.வி.க.வுக்கு வழங்கப்பட்டது. அக் கெளரி சங்கம் நீண்டநாள் திரு.வி.க.வின் கழுத்தில் மிளிரவில்ஜல.