பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

163

வேங்கடாசல ஆச்சாரியார் என்பவர் சிவனடியார் திருக்கூட்ட அன்பர்; திருத்தணிகையிலே ஒரு சத்திரங் கட்டினர். சத்திரத் திறப்பு விழாவுக்குத் திரு.வி.க அழைக்கப்பட்டார். திருக்கூட்ட அன்பர் பலரும் அழைக்கப்பட்டனர். எல்லாரும் திருத்தணிகை சேர்க் தனா.

திருக்குளத்தில் இறங்கி நீராடத் தொடங்கினர் திரு வி.க. கெளரி சங்கத்தைக் கழற்றி அன்பர் ஒருவ ரிடம் கொடுத்துவிட்டு நீரில் இறங்கினர். அந்த அன்பர் மற்றாெருவரிடம் கொடுத்துவிட்டு வெளியே போனுர், எப்படியோ கெளரி சங்கம் களவு போயிற்று. அடியவர் கூட்டம் வருந்தியது.

திரு.வி.க.வின் திருமணத்தின்போது அதே போன்றதொரு கெளரி சங்கம் அன்பளிப்பாக வழங்கி யது திருவல்லிக்கேணி சிவனடியார் கூட்டம்.

பலதிறப்பட்ட பொது வாழ்வில் ஈடுபட்டிருந்தமை யின் திரு.வி.க.வுக்கு அது பயன்படாதிருந்தது. பெட்டி யில் துரங்கிக் கொண்டிருந்தது. அதற்கும் ஒருவர் வந்தார்.

திரு.வி.க.வின் கண்பர் ஒருவர்; இளமை நண்பர்; பெயர் கோவிந்தராஜ முதலியார்; இசை ஞானி. அவர் பாடக் கேட்பதில் திரு.வி.க.வுக்கு விருப்பம் அதிகம், அவர் தாயுமானுரைப பாடில்ை உள்ளம் உருகும். சிவனடியார் திருக்கூட்டத்தில் திரு.வி.க பெரிய புராணப் பிரசங்கம் செய்தபோது இடையிடையே தேவாரம் பாடுவார் கோவிந்தராஜர். கையேடு படிப்ப வர் வராத காளிலே கையேடும் படிப்பார். சென்றது கருதார்; காளை சேர்வது கினையார் என்ற கைவல்ய