பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

_

15

எனது சீற்றத்தில் தொனித்த உண்மையை அவர் உன்னினர். வாழ்க்கைக் குறிப்பை” எழுதினர். சுமார் ஆயிரம் பக்கங்களில் எழுதினர்.

யுத்தகால நெருக்கடி காகிதப் பஞ்சம். எனவே வாழ்க்கைக் குறிப்பு விரிந்த அளவில் வெளிவாவில்லை! விரிந்த அளவில் எழுத அவர் எண்ணியிருந்தவை பல கால நிலையும் காகிதப் பஞ்சமும் அவர் தம் முயற்சிக்கு இடந் தரவில்லை. இருப்பினும் அவர் காலத்து வரலாற்றினை அறியப் பெருந்துணையாக நிற்கிறது அவர் தம் வாழ்க்கைக் குறிப்பு

திரு வி. க. மணி விழாவின்போது அவர் தம் வாழ்க்கை வரலாற்றினை எழுதி வெளியிட எண்ணினேன். இப்பொழுது வேண்டாம் என்றார் திரு.வி.க. அவரது விருப்பத்துக்கு மாருக நடக்க விரும்பினேன் அல்லன்.

அவர் மறைந்து கால் நூறு ஆண்டுகள் ஒடிவிட்டன. இப்போது அவரது வாழ்க்கை வரலாற்றினை எழுதல் வேண்டும் என்ற எண்ணம் என்னை உந்தியது; உந்தித் தள்ளியது. எழுதினேன். திரு.வி.க. பிறந்த நூருவது ஆண்டில் இந்நூல் வெளிவருகிறது. இந்நூலே எழுதுமாறு என்னைத் துரண்டியவர் பாரி நிலைய உரிமையாளர் திரு. செல்லப்பன் அவர்கள். அழகாக வெளியிடுபவரும் அவரே. இவருக்கு எனது நன்றி.

திரு.வி.க வின் முழுப் படத்தையும் காண விரும்புவோர் எனது மற்ற நூலையும் காண்க. திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்’ என்பதுவே அந்நூல்.

‘எனது புறப்படங்களில் என்னைப் பார்ப்பதைப் பார்க்கிலும் எனது நூற் படங்களில் என்னைப் பார்க்குமாறு அன்பர்களே வேண்டுகிறேன்.” (திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள் பக் 898)

சக்திதாசன் சுப்பிரமணியன்