பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

168

எனவே, எருமைப்பால் கொள்ளமாட்டார். இளமையில் கூட்டங்களில் பேசும்போது அடிக்கடி பால் அருங் தினர். பின்னே அவ்வழக்கம் கின்றது.

இராயப்பேட்டை கிராமம் போல் இருந்த காலத்தில் கல்ல பால் கிடைத்தது. அங்காளில் சொந்தப் பசுவும் இருந்தது. கினைத்த போதெல்லாம் மோர் அருந்தினர்.

காப்பி டி கொக்கோ முதலியன அருந்தார். எங்கேனும் இவற்றைப் பருக நேர்ந்தால் வயிற்றில் குமட்டல் கண்டு பெரிதும் தொல்லையுறுவார்.

ஒரு சமயம் கண்வலியும் தலை வலியும் அவரை வாட்டின. சிகிச்சை செய்தவர் மருந்து ஒன்று கொடுத்தார். அதைக் காப்பியில் கலந்து குடிக்கச் சொன்னர். அவ்வாறே செய்தார் திரு. வி. க. காப்பிக் குமட்டல் ஒழிந்தது. பிறகு எவரேனும் காப்பி கொடுத் தால் அதை மாருது உண்டார்.

அவ்விதம் காப்பி அருந்திய போதிலும் காப்பி அவரை அடிமை கொண்டதில்லை. அதை அவர் அடக்கியாண்டார். கா காக்கும் வல்லமை திரு. வி. க. வின் இயறகையில் அமைந்திருந்தது.

சென்னை நகரமே அவரது உறைவிடமாக அமைந்தது. நகரம் காப்பி ஹோட்டல் நிறைந்த ஒன்று. எனினும் வாழ்க்கையில் ஒரு முறைகூட திரு. வி. க. காப்பி ஹோட்டல் நுழைந்தாரிலர்.

சுருட்டு, சிகரெட், பீடி முதலியவற்றின் மீது அவருக்கு வெறுப்பு அதிகம். இவற்றின் புகை கண் டால் துணியால் மூக்கை மூடிக் கொள்வார்.

தாம்பூலம் உடலுக்கு கலன் செய்யும் என்பதை அவர் அறிவார். வெற்றிலை பாக்கு சுண்ணும்பு