பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

171

நோய் பற்றிய நூல்களைப் படிக்கக் கூடாது. நீரையும் சோதித்தல் கூடாது. நோய் எண்ணம் உள்ளத்தில் தங்கத் தங்க அது பெருகும் என்றார் டாக்டர் சம்பந்தம்.

கோதுமை, கேழ்வரகு, கீரை வகை, காய் வகை ஆகியவற்றினை முறை முறையே உண்டு உண்டு பார்த்தார் திரு.வி.க. சோதனையில் என்ன கண்டார்?

கேழ்வரகும் கீரையும் இனிப்பைக் குரைத்தல் கண்டார். கோதுமையைவிடக் கேழ்வரகே கலம் செய்தல் கண்டார். கேழ்வரகுக் கஞ்சியும் தோசையும் அவருக்குப் பொருந்தின. கீரை வகைகளில் கலவங் கீரையும், சிறு பசலையும் இனிப்புக்கு எதிரி என்றுகண்டார். காட்டுச் சுண்டையும், பாகலும், வண்டை யும் கலஞ் செய்தல் கண்டார். ஏறக்குறைய இரண்டரை ஆண்டு காலம் பத்திய உணவில் கருத்துச் செலுத்தினர்.

வீட்டிலும் சரி. அவர் செல்லும் இடங்களிலும் சரி. அவருக்கென்று தனிச் சமையல் செய்வது அவர் தம் உள்ளத்தை வருத்தியது. பத்திய உணவை விட்டார்.

பழையபடி அரிசிச் சோறு-பண்டங்கள் முதலியன உணவாயின. எல்லாம் ஆண்டவன் செயல் என்ற முடிவுக்கு வந்தார்.