பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173

173

புரட்சிக்கு உரியது தொழிலாளர் இயக்கம் என்று சொல்ல வேண்டுவதில்லை. ஆதலின யான் புரட்சி மனப்பான்மையுடன் தொழிலாளர் இயக்கத்தில் இறங்கினேன்.

புரட்சி இருவகை. ஒன்று அறவழியில் நிகழ்வது. மற்றாென்று மற வழியில் நிகழ்வது. அஃது அறப் புரட்சி. இது மறப் புரட்சி. உலகைச் சீர்செய்ய அறப் புரட்சி இடம்பெருத வேளையில் மறப்புரட்சி அவ்விடத் தில்தானே நுழையும். இரண்டாலும் விளையும் பயன் ஒன்றாகுமா? ஒல்லும் வகை அறப்புரட்சிக்கு இடக் தருவதே அறிவுடைமை. இல்லையேல் மறப்புரட்சி எழும.

“எனது மனத்துக்கு இயைந்தது அறப் புரட்சியே. அறப்புரட்சி வாயிலாகச் சன்மார்க்கத்தை ஒம்பவே யான் தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபட்டேன்.”