பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

23. உடையும் உறக்கமும்

திரு.வி.க குழந்தையாயிருந்தபோது அணிந்த ஆடை எது? சிற்றாடை, சட்டை, தொப்பி. எங்கேனும் குழந்தை திரு.வி.க.வை அழைத்துச் செல்ல நேரும் போது தாயார் அணிவிக்கும் உடை இது. சரிகைத் தொப்பியிலும் வெல்வெட் சட்டையிலும் குழந்தை திரு.வி.க.வுக்கு விருப்பம் அதிகம்,

சைவப் பிரசங்க மேடையில் திரு.வி.க எப்படி விளங்கினர்? தஞ்சாவூர்க் குடுமி; இடுப்பில் வெண்மை யான ஆரணி வேட்டி. அரையில் பீதாம்பரம். கழுத் தில் கெளரி சங்கம். தோளிலும் மார்பிலும் இளமை தவழும்; செழுமை கொழிக்கும்.

பள்ளிக்கூட உடை எப்படி? தலையில் வெண்மை யான தலைப்பாகை. அதிலே சரிகைக் கோடு ஒளி வீசும்:

நீண்ட சட்டை முழங்கால்வரை தொங்கும். அரை யில் கீழ்ப்பாச்சிக் கட்டிய வெள்ளை வேட்டி. சரிகைத் துணியோ, பட்டுத் துணியோ கழுத்தில் கிடக்கும்.

திரு.வி.க தேச பக்தன் ஆசிரியராயிருந்த போதும் அளித்த கோலம் இதுவே.

பின்னே காந்தியத்தில் ஈடுபட்டுக் காங்கிரஸ் பிரசாரமும் கதர்ப் பிரசாரமும் செய்த காலத்தில் எக் காட்சி வழங்கினர்?