பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

175

தலைக்கு அணி செய்த சரிகைத் தலைப்பாகை போயிற்று. கழுத்தை அலங்கரித்த பட்டுவேட்டி போயிற்று. நீண்டு முழங்கால்வரை தொங்கிய சட்டை போயிற்று. அரையில் கீழ்ப்பாச்சிக் கட்டிய ஆரணி வேட்டி போயிற்று. இடுப்பில் நான்கு முழத்துண்டு. உடலில் ஒரு ஜிப்பா. தோளில் ஒரு குட்டை.

இக்கோலமும் விடுத்து நான்கு முழத்துண்டு மட்டுமே உடுத்தி உலவ விரும்பினர் அவர். ஆனல் அவரது உடல்நிலை அதற்கு இடம் தர மறுத்தது.

இறுதிவரை இந்த எளிய கோலத்துடனேயே விளங்கினர் திரு.வி.க.

இளமையில் திரு.வி.க. கன்றாக உறங்குவார். ஏறக்குறைய எட்டு மணி நேரம் உறங்குவார். உறங்கி எழுவார். பின்னே அவ்வுறக்கம் படிப்படியே குறைய லாயிற்று. எட்டுமணி நேர உறக்கம், ஆறுமணி நேர உறக்கமாயிற்று. பின்னே அதுவும் சுருங்கியது. இரவு பன்னிரண்டு மணிவரை உறங்கமாட்டார். பன்னிரண்டுக்குப் பிறகு உறக்கம் வரும். அவ்வுறக்கம் எதுவரை கிற்கும்? மூன்று மணிவரை கிற்கும். மூன்று மணிக்குப் பிறகு உறங்கமாட்டார்.

உறக்கம் வராதபோது என் செய்வார்? படுக்கை யில் கிடப்பார். சிந்தனையில் ஆழ்வார். அங்கில விழிப்புமன்று, துயிலுமன்று.

உறக்கம் வராத நேரங்களில் நூல்களைப் படிப்பார்; எழுதுவார். அவர்தம் நூல்கள் எல்லாம் பெரும்பாலும்

இந்த கேரத்தில் எழுதப்பட்டவையே.

பகல் நேரத்திலே நூல் எழுத அமர்வார். எவ ரேனும் வருவர்; பேசுவர். அவ்வளவில் எழுதல்