பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

24. கலந்துரையாடலும் கருத்துரை கூறலும்

சென்ன இராயப்பேட்டையின் ஒரு பகுதி புதுப் பேட்டை என்று அழைக்கப்பட்டு வந்தது. புதுப் பேட்டைத் தெரு என்னும் பெயர்கொண்ட தெரு ஒன்றும் உளது. புதுப்பேட்டைத் தெருவின் முன் புறம உள்ளது கணபதி முதலித் தெரு. இத்தெரு விலே பன்னிரண்டு எனும் இலக்கம்கொண்ட வீடு ஒன்று உளது. இந்த வீட்டிலேதான் திரு.வி.க. வசித் தார். இந்த வீட்டிலேதான் திரு.வி.க.வின் அச்சகமாக விளங்கிய சாது அச்சுக்கூடம் இருந்தது. திரு.வி.க. வசித்த அந்த வீட்டிற்கு வாயில் இரண்டு. ஒன்று கணபதி முதலித் தெருவில் இருந்தது. மற்றாென்று புதுப்பேட்டை தோட்டத் தெருவில் இருந்தது.

புதுப்பேட்டைத் தோட்டத் தெருவில் இருந்த வாயில் வழியே புகுந்தால் அச்சு இயந்திரத்தின் ஒசை கம்மை வரவேற்கும். வேப்பமரம் நிறைந்த அத்தோட் டத்தைக் கடந்து வந்தால் சாது அச்சுக்கூடத்தின் தாழ்வாரத்தை அடையலாம். தாழ்வாரத்தில் ஒரு மேசை கிடக்கும். மேசையை ஒட்டி இரு பெஞ்சுகள் இருபுறமும் திரு.வி.க.வின்

12