பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

178

கண்கள் போல இருந்தன. இரு அறைகள். அந்த இரு அறைகளிலே ஒன்று சாது அச்சுக்கூட அலுவலகம். மற்றாென்று கவசக்தி அலுவவகம். தாழ்வாரத்தைக் கடந்து உள்ளே சென்றால் சாது அச்சுக்கூடம்.

இத்தாழ்வாரத்திலே போடப்பட்ட பெஞ்சிலேதான் தமிழ்நாட்டின் தவமுனிவர் திரு.வி.க. அமர்ந்திருப்பார். தம்மைக் காண வருவோருடன் உரையாடிக் கொண் டிருபபார்.

திரு.வி.க.வுடன் உரையாடுவது ஒரு பெரு விருந் தாகும். அவர்தம் உரையாடலிலே தமிழ்மணம் வீசும், இலக்கியம் அருவியெனப் பொழியும். தத்துவம் பாயும். சன்மார்க்கம் பீறிடும். அரசியல் அலை மோதும். மார்க்கிச மணம் வீசும். பல்கலைக் கழகம் ஒன்று தன் திருவாய் திறந்து பேசில்ை எப்படியிருக்குமோ அப் படிப்பட்ட உணர்ச்சி ஏற்படும். அறிவு அறிவு அறிவு: அறிவுக்கு விருந்து. அன்புடன் ஊட்டும் விருந்து

எனலாம்.

அவருடன் உரையாடுதற்கு வருவோர் பலர்; பல திறத்தினர்; மாணவர் வருவர்; தொழிலாளர் வருவர். காங்கிரஸ் கட்சியினர் வருவர்; ஜஸ்டிஸ் கட்சியினர் வருவர். இந்தியை ஆதரிப்போர் வருவர்; இந்தியை எதிர்ப்போரும் வருவர். சுய மரியாதைக் கட்சியினர் வருவர்; ஆத்திகர் வருவர்; காத்திகரும் வருவர். சைவர் வருவர்; வைணவர் வருவர். ஆடவர் வருவர்; பெண்டிர் வருவர்; சீர் தி ரு த் தம் வேண்டுவோர் வருவர்; சீர்திருத்தம் வேண்டாதோரும் வருவர்.

மாணவருடன் பேசும்போது அவர்தம் நிலையில் நிற்பார். மாணவர்களுக்கு ஊக்கமூட்டுவார். உணர்ச்சி