பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

179

பெறத்தக்க கிகழ்ச்சிகளை எடுத்துக் கூறுவார். அந் நிலையில் தாம் ஒரு மாணவராக விளங்குவார்.

தொழிலாளருடன் பேசும்போது அவர்தம் கிலேயில் நிற்பார். தொழிலாளருக்கு ஊக்கமூட்டுவார். உணர்ச்சி யூட்டுவார். தொழிலாளர் சக்தி எத்தகையது என்று எடுத்துக் காட்டுவார். அந்நிலையில் தாம் ஒரு தொழி லாளியாக விளங்குவார்.

காங்கிரஸ்காரருடன் பேசும்போது தலைநாள் காங் கிரஸ் கிகழ்ச்சிகளைக் கூறுவார். தமது ‘அநுபவங்களை எடுத்துரைப்பார். போராட்ட லட்சியங்களை விளக்கு வார். காங்கிரஸ் கட்சியில் உள்ள தவறுகளை எடுத்துக் காட்டுவார். லட்சிய வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டுவார். வந்தவரும் இருந்தவரும் ஒன்றி மகிழ்ந்து விடை பெற்றுச் செல்வர்.

ஜஸ்டிஸ்காரர் நடுவே பேசும்போது சர். பி. தியாக ராய செட்டியாரின் உயர் பண்புகளை எடுத்துக் கூறுவார். ஜஸ்டிஸ் கட்சியின் சீர்திருத்தங்களை சீர்திருத்தக் கருத்துக்களை ஆதரிப்பார். ஜஸ்டிஸ் கட்சியின் வகுப்புவாதக் கொள்கையை மறுப்பார். அவ்ர்தம் அன்புப் பேச்சில் மகிழ்ந்து வந்தவர் செல்வர். சுயமரியாதைக்காரர் வருவர். திரு.வி.க.வுடன் சண்டை பிடிப்பார். எனது சன்மார்க்க இயக்கத்தின் குழவியே சுயமரியாதை இயக்கம். சன்மார்க்கத்தின் அடிப்படை அன்பு. சுயமரியாதை இயக்கத்தின் அடிப் படை காழ்ப்பு. காழ்ப்பை விடுக. அன்பை அணைக்க வாருங்கள்’ என்பர் திரு.வி.க. அவர்தம் அன்புரையில் திளைத்துச் செல்வர்.

கம்யூனிஸ்டுகள் வருவார்கள். அவர்களுடன் உரை யாடுவார் திரு.வி.க. கம்யூனிசத்தின் உயர் லட்சி