பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181

181

இந்தியை ஆதரிப்போர் வருவர். இந்திய நாட்டின் பொது மொழி இந்தியே. அதை எவரும் ஏற்பர். தென் ட்ைடினர்க்கு அம்மொழி புதிது. புதிய மொழியைப் பரப்ப நீங்கள் விரும்புகிறீர்கள். அது நல்லதே. நீங்கள் கொண்டுள்ள கோக்கமும் கல்லதே. கல்ல நோக்கம் எப்படிப் பாழாகிறது பாருங்கள்! கட்டாயமாகத் திணித்திர்களாயின் அது என்ன விளைவிக்கும்: எதிர்ப்பையே விளைவிக்கும். கட்டாயத்தை நீக்குங்கள். எதிர்ப்பும் மறையும். இந்தியும் பரவும் என்பார். வந்தவர் அவர்தம் சீரிய அறிவுரை கேட்டுச் செல்வர்.

ஆண்டுகள் சென்றன. இந்தி கட்டாயம் நீங்கியது. எதிர்ப்பும் மறைந்தது.

திரு.வி.க.வுடன் பேசும்போது சீறுவர் சிலர்; பதட்டமாகப் பேசுவர் சிலர்; எதிர்த்து முழங்குவர் மற்றும் சிலர். எனினும் அவர் சிறிதும் சமநிலை பிறழார். அமைதியாகப் பதில் கூறுவார். எவரிடத் தும் அன்பாகப் பேசுவார்; ஆத்திரமடையார்; பதட்ட மள்கப் பேசார். எவரையும் கடிந்து பேசமாட்டார்.