பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183

183

வளர்த்தவர் பெரியவர்; திரு. வி. க.வின் எழுத்துக்கு நூல் வடிவம் கொடுத்தவர் பெரியவர்; பின்பு அக் நூல்களை எல்லாம் விற்றுப் பணமாக்கியவர் பெரியவர். எழுத்தும் தொண்டும் அன்றி வேறு எக்கவலையும் திரு.வி.கவை நெருங்காதவாறு கட்டிக்காத்த பெரியவர் இறந்தார்.

சாது அச்சுக்கூட உரிமை உலககாத முதலியார், பெயரில் இருந்தது. உரிமையைத் தம் அண்ணியார் பெயருக்கு மாற்றினர் திரு.வி.க. -

ஆயிரத்துத் திொளாயிரத்து நாற்பத்து ஏழாம் ஆண்டு பக்கிங்காம் ஆலையில் வேலை கிறுத்தம்.

தொழிலாளர் சங்கத் தலைவர் அந்தோணிப் பிள்ளை யும், திரு.வி.கவும் தொழில் அமைச்சரைக் கண்டு பேசினர். அப்போது தமிழ் காட்டில் நடைபெற்று வந்தது காங்கிரஸ் ஆட்சி. தொழில் அமைச்சராக இருந்தவர் திருச்சி டாக்டர் டி. எஸ்.எஸ். ராஜன்.

மந்திரி ராஜன் திரு.வி.கவின் கெருங்கிய நண்பர். எனவே தொழிலாளர் சங்கத்தின் பழந் தலைவர் திரு.வி.க வும், தலைவர் அக்தோணிப்பிள்ளையும் தொழில் மந்திரி ராஜனைக் கண்டு பேசினர். மந்திரி என்ன கூறினர்? சில நாள் தவணை அளித்தார். அதற்குள் ஆலை முதலாளிகளுடன் பேசி ஒர் உடன்பாடு காணுமாறு கூறினர்.

தலைவர் இருவரும் மந்திரியின் யோசனையை ஏறறுத் திரும்பினர். ஆல்ை மந்திரி என் செய்தார்? தவணைக் காலத்துக்கு முன்பே அந்தோணிப்பிள்ளை யைக் கைது செய்துவிடப் பணித்தார். அந்தோணிப் பிள்ளையும் கைது செய்யப்பட்டார்.