பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

26. எளிய வாழ்வும் திரு.வி.கவும்

தே, பக்தன்’ ஆசிரியராக இருந்தபோதும் பின்னே கவசக்தி ஆசிரியராகக் காங்கிரஸ் பிரச்சாரம் செய்தபோதும் திரு.வி.க பயணம் செய்தது எப்படி? பெட்டி, படுக்கை கூஜா இவற்றுடன்தான் செல்வார். உடலில் கோட்டும், கழுத்தைச் சுற்றி குட்டையும் அணி செய்யும். பின்னே காந்தியப் பிரச்சார மும் சன்மார்க்கப் பிரச்சாரமும் செய்தபோது பெட்டியும் படுக்கையும் கூசாவும் அவரைவிட்டு அகன்றன. காலு முழக் கதர் வேட்டி, கதர் ஜிப்பா, கழுத்தில் ஒரு கதர் குட்டை, கையில் ஒரு பை அதிலே ஒரு செட் துணி, அவ்வளவே.

இந்தக் காலத்தில் பொதுக்கூட்டம் போட்டுப் பேச் சாளர்களை அழைத்தால் அப்பேச்சாளர் என்ன கேட் பார். பேசப் பணம் கேட்பார். ஒரு கூட்டத்தில் பேசுவ தற்கு இவ்வளவு என்று வசூலிப்பார்.

அந்த காளிலே திரு.வி.க. அம்மாதிரி பணம் கேட்டாரிலர். அவரை அழைக்கும் வெளியூர் அன்பர்கள் வழிச் செலவுக்குரிய தொகையை அனுப்புவார்கள். பெரும்பாலும் திரு.வி.க. அந்த நாளைய இரண்டாம் வகுப்பு ரயில் வண்டியில்தான் பயணம் செய்வார். ரயில்வே ஸ்டேஷனில் அவரை அழைக்க வந்தவர்கள்