பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. ஊரும் பேரும்

ஆயிரத்து எண்ணுாற்று எண்பத்து முன்றம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இருபத்தி ஆரும் தேதி திரு.வி.க. அவர்கள் இங்கிலவுலகில் தோன்றினர்கள்.

திரு.வி.க. அவர்களின் தந்தையார் பெயர் விருத்தாசல முதலியார்; தாயார் பெயர் சின்னம்மாள்.

விருத்தாசலஞர்க்கு ஆங்கிலம் சுவைக்கவில்லை; தமிழே இனித்தது. இசையும், நாடகமும் அவரை ஈர்த்தன. அவர் இராம நாடகப் புலவர் ஆர்ை; இராம நாடக ஆசிரியராகவும் சில காலம் விளங்கினர்; கீர்த்தனை பல இயற்றினர்; தமிழ்ப் பள்ளி ஒன்றும் கடத்தினர்; எனினும் பெரும் பொழுது வாணிபத்தில் ஈடுபடலானுர், சென்னை இராயப்பேட்டையிலே ஒர் அரிசிமண்டி வைத்து வாணிபம் செய்து வந்தார்.

விருத்தாசலஞரின் மனைவியர் இருவர். ஒருவர் பெயர் பச்சையம்மாள்; இன்னும் ஒருவர் பெயர் சின்னம்மாள்.

பச்சையம்மாள் ஈன்ற மக்கள் கால்வர். அவருள் மூவர் ஆண்; ஒருவர் பெண்.தி.-2