பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

191

யிலும் இவைகளின் ஒன்றைப்போல உடுத்தியிருந்த தில்லையென்று உங்களுக்குச் சொல்கிறேன்.

இன்றைக்கிருந்து காளைக்கு அடுப்பிலே போடப் படும் காட்டுப் புல்லைக் கடவுள் இவ்விதமாய் உடுத்தின ரானல் அற்ப விசுவாசிகளே, உங்களை உடுத்துவது அதிக நிச்சயமல்லவா? ஆதலால் எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போமென்று கவலைப்பட வேண்டாம். இவற்றையெல்லாம் புற ஜாதியார் காடித் தேடுகிறர்கள். இவையெல்லாம் உங்களுக்குத் தேவை யென்று உங்கள் பரமபிதா அறிவார். முதலாவது கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவையெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். ஆகையால் காளைய தினத்திற் காகக் கவலைப்படாதிருங்கள்.

மத்தேயு 6 : 25-34

கிறிஸ்து பெருமான் அருளிய இத்திரு மொழிகளைத் தம் வாழ்வில் நடைமுறையில் கடைப்பிடித்தவர் திரு.வி.க.

எனவே அவர் வையத்து வாழ்வாங்கு வாழ்ந்தவர். வானுறையும் தெய்வத்துள் வைத்து எண்ணப்பட வேண்டியவர்.