பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

28. மாலையும் மறைதலும்

ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்து ஒன்ப தாம் ஆண்டு. அவரது இடது கண்ணிலே படலம் தோன்றியது. அறுவை சிகிச்சை செய்யவேண்டிய τβ/8ου.

திரு.வி.க.வின் நெருங்கிய நண்பர் கந்தசாமிப் பிள்ளை; கண் மருத்துவர். அறுவை சிகிச்சை செய்தார். என்ன ஆயிற்று? பார்வை வரவேயில்லை; போயிற்று. திரு.வி.க வெளியே செல்வது விடுத்தார். அடுத்த ஆண்டு மற்றாெரு கண்னும் இழந்தார். படுக்கையில் கிடக்கலானர்.

ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ந் தேதி திரு.வி.க. கண் இழந்து படுக்கையில் கிடக்கிறார் என்ற செய்தி கேட்டு அவரைப் பார்க்க வந்தார் ஓர் அம்மையார்.

அப் பெண்மணி கன்கு பாடுதல் வல்லார். தேவாரப் பதிகங்களைப் பாடினர். திருவாசகப் பாடல்களைப் பாடினர். திருவருட் பாக்களைப் பாடினர். பகல் முதல் மாலை வரை பாடிக்கொண்டே இருந்தார்.

அப்பாடல்களிலே மூழ்கித் திளைத்தார் திரு.வி.க. இரவு மணி 7-30. மரண வேதனையுற்றார் திரு.வி.க.