பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

193

இளமை முதல் திரு.வி.க.வின் இணைபிரியா நண்ப ராக விளங்கிய சச்சிதானந்தம் பிள்ளை அவர்கள் உடன் இருந்தார்கள். திரு.வி.க.வின் காதில் ஐந்தெழுத்து மந்திரம் ஒதினர்கள். அவ்வளவில் திரு.வி.க.வின் ஆவி பிரிக்தது.

இரவு மணி 7.40, இறைவனடி சேர்ந்தார் திரு.வி.க.

திரு.வி.க இறந்த செய்தி சென்னை நகர் முழுவதும் பரவியது. அன்பர் கூட்டம் கடல் எனத் திரண்டது. சைவர் வந்தனர்; கிறிஸ்தவர் வந்தனர், ஜைனர் வந்தனர்; பெளத்தர் வந்தனர். அரசியல் கட்சித் தலைவர் பலரும் வந்தனர்.

திரு.வி.க.வுக்கு அஞ்சலி செலுத்தினர்.

18-9-53 காலை திரு.வி.க.வின் உடல் பெரம்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சென்னைத் தொழிலாளர் சங்கத்திலே வைக்கப்பட்டது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தம் இன்பத்திலும் துன்பத்திலும் உற்ற துணையாயிருந்த ஒப்பற்ற தலைவருக்குத் தொழிலாளர் வணக்கம் செய்தனர்.

பகல் இரண்டு மணிக்குத் திரு.வி.க.வின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பதினுயிரக் கணக்கான தொழிலாளர் திரு.வி.க.வின் உடலுக்கு முன்னும் பின்னுமாக அணிவகுத்து ஊர்வலமாக மயிலாப்பூர் மயானம் சென்றனர்.

தி -13