பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

196

பணமே உன்னுல் என்ன குணமே!’ என்று பாடு வோர் பலரைக் காண்கிருேம். பணத்திற்கு அடிமைப் படலாகாது’ என்று உபதேசம் செய்வோர் பலரையும் காண்கிருேம். ஆல்ை இவர்களோ! பணம் பணம்’ என்று பித்துப் பிடித்து அலைவதும் காண்கிருேம்.

ஆனல் திரு.வி.க. ஒரு நாளும் பணத்திற்கு அடிமை யானுரல்லர். பண ஆசை அவருக்கு இல்லை இல்லை என்பேன். பணம் அவரைத் தேடி வந்தபோதும் பணம் வேண்டாம் வேண்டாம் என்று உதறிய ஒப்பற்ற பெரியவர் திரு.வி க.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த காட்டில் தோன்றிய பெரியார்கள் அறிவுறுத்திய பொன் மொழி களைத் தம் வாழ்வில் கடைப்பிடித்தவர் திரு.வி.க.

அன்பு, எளிமை, உயர் சிந்தனை ஆகிய மூன்றுமே வாழ்வில் போற்றத்தக்கன என்று அறிவுறுத்தினர் கமது முன்னேர்.

இம்மூன்று கொள்கைகளையும் போற்றிப் பேணிய வர் திரு.வி.க. அன்பின் வடிவம். எளிமையின் உருவம், உயர் சிந்தனையின் நிலைக்களன்.

அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வெவ் வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்’ என்பது வள்ளுவர் மொழி.

அம்மொழியினுக்கோர் எடுத்துக்காட்டாக விளங்கி யவர் திரு.வி.க. எவ்வுயிர் மாட்டும் செந்தண்மை பூண்டு ஒழுகியவர்; உயர் அந்தணர்.

சாதி, மதம், நிறம்,மொழி முதலியவற்றைக் கடந்து கின்றவர் திரு.வி.க.