பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

18

பச்சையம்மாள் நீண்ட காலம் இங்கிலவுலகில் வாழ வில்லை; நோய்வாய்ப்பட்டு இறந்தார். L5 விருத்தாசலனர் சின்னம்மாளை மணம் புரிந்தாா.

சின்னம்மாளின் மணி வயிறு, எட்டுக் குழவிகளை ஈன்றது. அவற்றுள் ஐந்தாவது குழவிக்கு உலக காதன் என்று பெயரிட்டனர் பெற்றாேர், ஆருவது குழந்தைக்குக் கலியாணசுந்தரம் என்று பெய ரிட்டனர்.

‘ஆருவது மகன் ஆனை கட்டி வாழ்வான்’ என்பது வழக்கு.”

இந்த ஆருவது குழவியே பிற்காலத்தில் தமிழ்க் கடலாக விளங்கியது; தமிழ்த் தென்றலாக வீசியது; தமிழ் ஓவியமாய் மிளிர்ந்தது; கடமாடும் பல்கலைக் கழக மாய்க் காட்சி தந்தது; சமரச சன்மார்க்க மனம் வீசியது; வாய்மையும், துய்மையும், எளிமையும், தொண்டும் ஒர் உருக்கொண்டாலென்னத் தோன் றியது; திரு.வி.க. எனும் பெயர் பெற்றது.

  • திரு என்பது திருவாரூரைக் குறிப்பது. வி. என்பது விருத்தாசலனுரைக் குறிப்பது. க என்பது கலியாணசுந்தரனுரைக் குறிப்பது. திரு.வி.க. என்ற சுருக்கத்தின் விரிவு இதுவே.

திருவாரூர் என்பது தஞ்சை ஜில்லாவில் உள்ளது. சோழநாட்டுத் திருப்பதிகளில் ஒன்று; சேக்கிழார் பெரு மால்ை பாடப்பட்டது. பெரியதொரு திருக்கோயிலும், பெரியதொரு திருக்குளமும் கொண்டது.

  • யான் ஆருவது பிள்ளை. எனது வலது காலடியின் இறுதியில் ஆருவது விரல் படைப்பில் அமைந்துள்ளது. -திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்பு.