பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

21

கலியானசுந்தரன் என்று பெயரிட்டனர் பெற்றாேர். எனினும், இவ்விருவர்தம் வீட்டுச் செல்லப் பெயர், பெரிய சாமி, சின்னச்சாமி என்பன.

திரு.வி.க.வின் பாட்டியார் பெயர் கனகம்மாள்; திரு.வி.க.வின் தாயை ஈன்றவர். இவ்வம்மையார்க்கு ஆண் பிள்ளை ஏதும் பிறக்கவில்லை. எனவே, பெரிய சாமி, சின்னச்சாமி ஆகிய இருவர் மீதும் எல்லையற்ற அன்புகொண்டிருந்தார். இவர் துள்ளத்துக்கு அடிக்கடி செல்வார்; பேரன்மார்களைக் கண்டு மகிழ்வார். சென்னை யிலிருந்து துள்ளம் செல்லும்போதெல்லாம் பல திறப் பொருள்களை வாங்கிச் செல்வார். பொருள் கானும் சின்னச்சாமி தமக்கு விருப்பமானவற்றை யெல்லாம் எடுத்துக்கொண்டு விடுவார்.

அது காரணமாகச் சின்னச்சாமிக்கும் பெரிய சாமிக்கும் போர் கிகழும். அது கண்டு பாட்டியார் மகிழ்வார்

ஒருமுறை பாட்டியார் இரு மனைகள் கொண்டு வகதார்; பித்தளைப் பூண்களிட்ட அழகிய மனை. பேரன் மார்களுக்கென்றே கொண்டு வந்தார்.

அவற்றுள் ஒன்றைச் சின்னச்சாமி எடுத்துக் கொண்டார்; அதுகண்ட பெரியசாமி.அஃதே வேண்டும் என்று அதைப் பிடுங்கினர். பெருத்த சண்டை. முடிவில் வெற்றி யாருக்கு? சின்னச்சாமிக்கே

சின்னச்சாமியின் ம2ணயில் எவரும் அமர்தல் கூடாது. எவரேனும் அமர்தல் கண்டால் அதைச் சின்னச்சாமி பொறுக்கமாட்டார்; அழுவார்; சாப்பிட LDfTL – –fTT.