பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

29

நீங்கியது; கை கிமிர்ந்தது; காலும் நேராயிற்று. படுக்கைவிட்டு எழுந்தார் கலியான சுந்தரனுர்.

கால் வலிமை பெற வில்லை. கிற்க முடியவில்லை. கீழே விழுந்தார். எழுவதும் விழுவதுமாகச் சின்னுட்கள் சென்றன. பின்னே சுவர் பற்றி மெல்ல அடி எடுத்து வைத்தார். சிறிது தைரியம் ஏற்பட்டது. மெல்ல. மெல்லக் கோல் ஊன்றி கடக்கலானுர்.

இவ்வளவில் இரண்டு ஆண்டுகள் சென்றன. அவரது பள்ளிப் படிப்பு தடைப்பட்டது.

மீண்டும் பள்ளி செல்லவேண்டிய முயற்சிகள் நடை பெற்றன. அக்கிலையில் விருத்தாசலஞர் நோய்வாய்ப்

LJt{T

விருத்தாசலனுர் நோயினின்றும் விடுபட்டபோது அவரது மனைவியார் கோயுற்றார். எழும்பூர் மருத்துவ சாலையில் அவர் சத்திர சிகிச்சை பெற்றார். அவர் நலம் பெற்றதும் அவரது தந்தையார் இறந்தார்.

விருத்தாசலனரின் குடும்பம் பலவிதத் தொல்அல களால் நெருக்குற்றது. அரிசி மண்டி மூடப்பட்டது. துள்ளத்திலிருந்து ஒழுங்காக கெல் வரவில்லை.

இந்நிலையில் கலியாண சுந்தரனுர் மீண்டும் பள்ளி செல்வது எப்படி? மற்றும் இரண்டு ஆண்டுகள் விணில் சென்றன.

1898-ல் மீண்டும் வெஸ்லி கல்லூரியில் சேர்ந்தார். அவர் விட்ட நான்காவது வகுப்பிலேயே சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவ்வகுப்பின் ஆசிரியராக விளங் கியவர் தேவதாஸ் என்பவர்; சிறந்த ஆசிரியர்; பிள்ளை கள் மனத்தில் தெளிவாக ஊன்றிப் பதியுமாறு போதிக் கும் திறன் படைத்தவர்.