பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30

வகுப்பில் முதன் மாணவராக விளங்கினர் சுந்தரஞர். எனவே, அவர் சட்டாம்பிள்ளையாக நியமிக் கப்பெற்றார். -

ஆசிரியர் தேவதாசரின் வீட்டுக்கு அடிக்கடி செல் வார் கலியாண சுந்தரனர்; காரணம் ஆசிரியரின் அன்பு. தமக்கு ஏற்பட்ட ஐயங்களைக் கேட்பார்; தெளிவார். தேவதாசரின் மனைவி இலக்கணம் கற்பித்தார். முதன் முதல் தமிழ் இலக்கணத்தில் சுந்தரனுர்க்குச் சுவை பூட்டியவர் இவ்வம்மையாரே.

பள்ளிக் கூடத்தில் ஞாயிறு தோறும் வகுப்பு ஒன்று நடைபெறும். பிரின்சிபால், வைஸ் பிரின்சிபால் முதலிய ஐரோப்பியப் பாதிரியாரே அவ்வகுப்பு மடத்துவோர்.

கலியாண சுந்தரனர் அவ்வகுப்புக்குச் செல்வர்; பல ஆண்டுகள் அவ்வகுப்புக்குச் சென்று பரிசில் பெற் ருர், அதனுல் ஐரோப்பியப் பாதிரிமாரின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.

நான்காம் வகுப்புப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றார் கலியாண சுந்தரனர். முதல் பாரம் சென்று அமர்ந்தார். சம்பளமில்லாது கல்வி பயிலும் மாணவர் ஆனர். இவருக்கு வேண்டிய புத்தகங்களை எல்லாம் இவரது பெரிய தந்தையாரின் கும்ாரர் வாங்கித் தந்தார். எனவே, சுந்தரனர் எவ்வித இடையூறுமின்றிப் படித்தார்.

கலியாண சுந்தரம் மூன்றாவது பாரத்தில் படித்த பொழுது அவ்வகுப்பின் ஆசிரியராக இருந்தவர் பெயர் டேவிட் தேவதாஸ். அவர் பாதிரியார். இராயப் பேட்டையில் வசித்தார். அவர் வீட்டுக்கு நாள்தோறும்