பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

34

பற்றித் தாவித்தாவி ஏறுவர் சிலர். இந்த விளையாட் டின் பெயர் குரங்காட்டம். விளையாட்டில் ஒவ்வொரு போது கலப்பார் கலியாண சுந்தரர்ை.

ஒரு நாள். குரங்காட்டம் ஆடிக் கொண்டிருக்த போது, காற்றுப் பலமாக வீசியது. காற்றாடி பிடிக்கச் சென்று, கொன்றை மரத்திலிருந்து கீழே விழுந்ததை எண்ணினர் கலியான கந்தரனுர். அச்சம் கவ்வியது. மெதுவாகக் கீழே இறங்கினர்; குரங்காட்டத்தை அன்றே விட்டொழித்தார்.

கலியாண சுந்தரனுர் வசித்த வீட்டுக்கு அருகில் உள்ளது சுந்தரேசுவரர் கோயில். அக்கோவில் திரு விழாக் காலத்தில் சுண்டல் வழங்குவதுண்டு.

சுண்டல் வாங்கும் பொருட்டுப் பெரிய வரும் சிறிய வரும் ஒருவரை மற்றாெருவர் தள்ளிக்கொண்டு முந்துவர்; சுண்டல் வழங்குபவரைச் சுற்றி ஈயென .ெ மாய்ப்பர்.

கலியான சுந்தரனுரோ, அவ்வாறு கூட்டத்தில் சென்று வாங்கமாட்டார்; தனியே ஓரிடத்தில் ஒதுங்கி நிற்பார். சுண்டல் வழங்குபவர் அவரைத் தேடிவந்து கொடுத்தால் வாங்குவார். இன்றேல், சுண்டல் வாங் காமலே வீடு திரும்புவார். அவர் இருக்குமிடம் தேடி வந்து சுண்டல் வழங்கியவர் சிலர். அவருள் குறிக்கத் தக்கவர் மண்டி மன்னத முதலியார் என்பவர்.

எஇவன் சீமான? இவனுக்கு என்ன தனிச் சுண்டல்?’ என்று சீறுவர் ஒருவர். அவர் கொண்டி.

சில சமயங்களில் கொண்டியாரும் சுண்டல் வழங்கு வார்; சிறுவர்களைப் பிடித்துத் தள்ளுவார்; போ’ என்று விரட்டுவார்; மருட்டுவார்.