பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

35

கொண்டியாரின் இச் செயல் க லி ய | ன சுந்தரனுர்க்குச் சிறிதும் பிடிக்கவில்லை. கொண்டி யாரைத் தண்டிக்க எண்ணினர். நண்பர்களைக் கலந்து யோசித்தார். கொண்டியாருக்கு மணல் அபிஷேகம் செய்வது என்று முடிவு செய்தார். எல்லாரும் கூடி கொண்டியாருக்கு மணல் அபிஷேகம் செய்தனர்.

சுந்தரேசுவரர் கோயில் முன்னே மணல் கொட்டப் பட்டிருந்தது. அதை வாரிக் கோயிலில் சேர்ப்பதற் கென்று குறிக்கப்பெற்ற ஆட்கள் வரவில்லை. சாயங் காலம் மன்னத முதலியார் கோயிலுக்கு வந்தார். தாமே மணலே அள்ளிக் கோயிலினுள் கொட்டத் தொடங் கினர். கண்டார் கலியான சுந்தரனுர்; தமது பட் டாளத்தை அழைத்தார். மணல் கோயிலினுள் சேர்ந்தது.

சில நேரம் கோயில் பூசைக்குச் சாமான் துலக்க கேரும். பழம் திருத்த கேரும். அவற்றையெல்லாம் கலியான சுந்தரனுர் மகிழ்ந்து செய்வார்.

அந்நாளில், எல்லா வீடுகளிலும் தண்ணிர்க் குழாய் இருக்கவில்லை. இராயப்பேட்டை முழுவதும் இரண்டே வீடுகளில்தான் தண்ணிர்க் குழாய் இருந்தது. தெரு புைக்கு ஒரு குழாய் இருக்கும். வீடுகட்குத் தேவையான தண்ணிரை இக் குழாய்களில்தான் பிடித்துக்கொள்ள வேண்டும்.

வீடுகளுக்கு வேண்டிய குழாய் நீரைக் கலியான சுந்தரருைம், அவருடைய பட்டாளமும் பிடித்துக் கொண்டு போய் கொடுக்கும். கலியாண சுந்தரர்ைக்கு இதுவும் ஒரு விளையாட்டே, நீர் சுமக்கும் பணியை அவர் நீண்ட காள் செய்து வந்தார்.