பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36

கலியான சுந்தரனுர் காலையில் எழுவார்; பழம் பாடங்களைப் படிப்பார்; புதிய பாடங்களையும் கெட்டிப் பார்ப்பார்; விளங்காதவற்றை இராயப் பேட்டையில் வசித்த ஆசிரியர்மாரிடம் கேட்டுத் தெளிவார்; பின்னே பள்ளியில் அவை போதிக்கப் பெறும்போது பழையன போலக் காண்பார்; எனினும், படிப்பில் கண்ணும் கருத் துமாயிருப்பார். காலையில் மாணவர் சிலர் அவர் வீட் டுக்கு வருவர். அவருடன் தோட்டங்களுக்குச் செல் வார் கலியாண சுந்தரனர். அந்தக் காலத்தில் இராயப் பேட்டையைச் சூழ்ந்து பல தோட்டங்கள் இருந்தன; ஒவ்வொரு காள் ஒவ்வொரு தோட்டம் செல்வர். எல்லாரும் பலவாறு பிரிந்து பிரிந்து ஆடுவர்.

கலியான சுந்தரனர் வாழை அறுப்பதில் கருத்துச் செலுத்துவார்; வாழைப்பூக் கொய்வார்; தண்டு உரித்து எடுப்பார்; அகத்திக் கிளைகளை வெட்டிச் சாய்ப்பார், கீரைக் காம்புகளைச் சுமையாகக் கட்டுவார்; வெற்றிலை கொய்து கொடுப்பார்; இன்னுேரன்ன பல வேலைகளில் ஈடுபடுவார். இது, தோட்ட வேலை செய்வோருக்குப் பேருதவியாயிருக்கும். அவர்கள் மகிழ்வார்கள்.

மகிழ்ச்சியின் அறிகுறியாக அகத்திக் கீரை , வாழைப்பூ, வெற்றிலை முதலியன கொடுப்பார்கள். அவற்றையெல்லாம் கலியான சுந்தரனுர் தமது கல் லாசிரியர் வீடுகளுக்குக் கொண்டு போய்க் கொடுப்பார்.

பிற்பகலில், கலியான சுந்தரனுர் தமது கண்பர் களுடன் கடற்கரை செல்வார்; சடு குடு ஆடுவார்; அது முடிந்ததும் கடலாடுவார்; சிற்சில சமயம், ஈர மண லில் சிவலிங்கம் எடுப்பார்; சோல்ஜர் வரக் கண்டால் சிவலிங்கத்தைச் சிதைத்துவிடுவார். சோல்ஜர்கள் பூட்ஸ் காலால் சிவலிங்கத்தை உதைப்பார்கள் என்பது