பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

39

முடவர் இருப்பர்; குருடர் இருப்பர்; பிணியாளரும் இருப்பர். இளம்பிள்ளைகள் ஒன்று சேருவார்கள்; வீடுதோறும் செல்வார்கள்; தர்மச் சோறு பிச்சை எடுத்து வருவார்கள்; கோயில் அருகே குழுமியிருக்கும் பிச்சைக்காரர்களுக்குக் கொடுப்பார்கள்.

அவர்களுடன் சேர்ந்து தர்மச் சோறு எடுத்துவர விரும்பினர் கலியான சுந்தரர்ை. ஆனல், மானம் மறித்தது. ஒருநாள் முடவர் ஒருவரைக் கண்டதும் அவரது மானம் பறந்தது. மற்றப் பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டார். தெருத் தெருவாகச் சென்றார். தர்மச்சோறு : அம்மா! தர்மச்சோறு என்று பாடிக் கொண்டு வீடு தோறும் நுழைந்தார். சோறு கிடைத் தது. கொண்டு வந்தார். பிச்சைக்கார முடவருக்குக் கொடுத்தார்.

கதிரை வேற் பிள்ளையிடம் சென்றபின் இப்பிள்ளை விளையாட்டுகள் படிப்படியே மறைந்தன என்று திரு.வி.க. கூறுகிறர்.”

கக்கா வரதன் என்பவன் கலியாண சுந்தரத்துடன் தாயம் விளையாடினன். விளையாட்டை யொட்டி இருவ ருக்கும் பேச்சு வளர்ந்தது. வரதன் தம்மை அடிப்பான் என்று கருதினர் கலியாண சுந்தரம். முதல் அடி, தமதா யிருக்க வேண்டும் என்று கருதினர். வரதன் கன்னத் தில் ஓங்கி அறைந்தார். அதைக் கண்டார் வரதனின் தந்தையார். கலியான சுந்தரத்தை நோக்கி விரைந்தார். கண்டார் கலியாண சுந்தரம். ஓடினர்; ஒளிந்தார். எனினும் கலியான சுந்தரத்தின் மனம் அமைதி பெற வில்லை. கம்மைத் துரத்தி வந்தவரை விடலாமா என்று கறுகிக்கொண்டே இருந்தார். இரவு தன்னந்தனிய

  • வாழ்க்கைக் குறிப்பு.