பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

40

ராகச் சென்றார் அவர். சமயம் பார்த்து அவர் முதுகின் மீது கல் எறிந்துவிட்டார் கலியான சுந்தரம்.

கலியான சுந்தரனர் விட்டுக்குப் பக்கத்திலே கிழவர் ஒருவர் இருக்தார். தெருவார் அவரைக் காஞ்சான்’ என்று சொல்லுவார். தம் வீட்டு வழியே ஒடிப் பக்கத் துத் தெரு சேர அவர் ஒருபோதும் பிள்ளைகளை விட மாட்டார்; தப்பித் தவறி எவராவது ஓடிவிட்டால் அவரைத் தடியால் அடிப்பார்.

ஒரு காள், ஒரு திருமணத்திலே இரவு வேளையிலே பாட்டுக் கச்சேரி கடைபெற்றது. அக் கச்சேரி நடுவில் கலியான சுந்தரம் இருந்தார். அவரது கண்கள் சுற்று முற்றும் பார்த்தன. பார்த்தபோது என்ன கண்டார்? காஞ்சான் கிற்றல் கண்டார். அவரை நோக்கிய வண்ணம் இருந்தார் கலியாண சுந்தரம். சிறிது நேரம் சென்றது. காஞ்சான் தமது வீட்டுக்குப் புறப்பட்டார். அவர் பின், தொடர்ந்தார் கலியாண சுந்தரம். ஒரு மூலையில் நின்றுகொண்டே சிறுநீர் பெய்தார் காஞ்சான்.

அப்போது அங்கே எவரும் இல்லை. கீழே கிடந்த வாழைப்பட்டை ஒன்றை எடுத்தார் கலியான சுந்தரம். காஞ்சான் முதுகிலே ஓங்கி அடித்தார். காஞ்சான்’ கூச்சலிட்டார். ஒடி வீட்டினுள் ஒளிக்தார் கலியான சுந்தரம்.

இராயப் பேட்டை அம்மையப்ப முதலி தெருவிலே கதிரை வேற்பிள்ளையின் சொற்பொழிவு ஒன்று கடை பெற்றது. அதுபோது வேதாந்திகள் சிலர் குறுக்குக் கேள்விகள் கேட்டனர். கதிரை வேற்பிள்ளையும் தக்க பதில் அளித்தார். வேதாந்திகள் ஒரு திண்ணையில் சென்று அமர்ந்தனர். கூட்டம் முடித்துக் கொண்டு